Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ மேற்கு வங்க அமைச்சர் வீட்டில் ஈ.டி., ரெய்டு

மேற்கு வங்க அமைச்சர் வீட்டில் ஈ.டி., ரெய்டு

மேற்கு வங்க அமைச்சர் வீட்டில் ஈ.டி., ரெய்டு

மேற்கு வங்க அமைச்சர் வீட்டில் ஈ.டி., ரெய்டு

ADDED : அக் 11, 2025 07:27 AM


Google News
Latest Tamil News
கொல்கட்டா : மேற்கு வங்கத்தில், நகராட்சி பணியாளர் நியமனத்தில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் வழக்கில், அம்மாநில அமைச்சர் சுஜித் போஸ் வீடு உட்பட மொத்தம் ஏழு இடங்களில், ஈ.டி., எனப்படும் அமலாக்கத் துறை நேற்று சோதனை நடத்தியது.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, தீ மற்றும் அவசரகால சேவைகள் துறை அமைச்சராக சுஜித் போஸ் பதவி வகிக்கிறார்.

இவர், 2010 - 2021 வரை கொல்கட்டா அருகில் உள்ள தெற்கு டம் டம் நகராட்சியின் துணைத் தலைவராகவும் இருந்தார். அப்போது, நகராட்சி பணியிடங்களை நிரப்பியதில் முறைகேடு நடந்ததாக, இவர் மீது அமலாக்கத் துறை வழக்கு பதிந்தது. இது தொடர்பாக, 2024 ஜனவரியில், அமைச்சர் சுஜித் போசிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக, மேற்கு வங்கத்தில், அமைச்சர் சுஜித் போஸ் உட்பட பல்வேறு நபர்களின் வீடு, அலுவலகங்கள் என ஏழு இடங்களில், அமலாக்கத் துறையினர் நேற்று சோதனை நடத்தினர்.

அப்போது, அமைச்சரின் முகாம் அலுவலகத்தில் இருந்து பணியாளர் தேர்வுக்கான ஓ.எம்.ஆர்., தாள்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், சில முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us