Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ தெலுங்கானாவில் தீ விபத்து: 8 குழந்தைகள் உட்பட 17 பேர் பலி

தெலுங்கானாவில் தீ விபத்து: 8 குழந்தைகள் உட்பட 17 பேர் பலி

தெலுங்கானாவில் தீ விபத்து: 8 குழந்தைகள் உட்பட 17 பேர் பலி

தெலுங்கானாவில் தீ விபத்து: 8 குழந்தைகள் உட்பட 17 பேர் பலி

ADDED : மே 18, 2025 11:43 PM


Google News
Latest Tamil News
ஹைதராபாத்: தெலுங்கானாவில் அடுக்குமாடி கட்டடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், எட்டு குழந்தைகள் உட்பட 17 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கானா தலைநகர் ஹைதராபாதில், உலகப் புகழ் பெற்ற சார்மினார் அருகே குல்சார் ஹவுஸ் என்ற அடுக்குமாடி கட்டடம் உள்ளது. இதில், தரை தளத்தில் நகைக்கடை இயங்கி வரும் நிலையில், முதல் மற்றும் இரண்டாவது தளத்தில் குடியிருப்புகள் உள்ளன.

இந்நிலையில், நேற்று காலை 6:00 மணி அளவில் இந்த கட்டடத்தின் தரை தளத்தில் உள்ள நகைக்கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது; மற்ற தளங்களுக்கும் தீ மளமளவென பரவியது.

காலை நேரம் என்பதால், வீட்டில் இருந்தவர்கள் துாங்கிக் கொண்டிருந்தனர். தீ விபத்தால் அப்பகுதியே புகை மண்டலமாக காட்சி அளித்தது.

அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயன்ற முயற்சி தோல்வி அடைந்தது. அதற்குள் தீ வேகமாக பரவியது. இந்த விபத்தில், எட்டு குழந்தைகள் உட்பட 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவலறிந்த மீட்புப் படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும், காயமடைந்தோரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தீ விபத்து நடந்த இடத்தை, தெலுங்கானா தீயணைப்புத் துறை டி.ஜி.பி., நாகி ரெட்டி நேரில் பார்வையிட்டார்.

இதன் பின், அவர் கூறியதாவது:

காலை 6:00 - 6:15 மணிக்குள் தீ விபத்து நடந்துள்ளது. இந்த கட்டடம் மிகவும் பழமையானது. மின் கசிவு காரணமாக தீ விபத்து நடந்துள்ளதாக சந்தேகிக்கிறோம். விபத்து நடந்த போது, கட்டடத்தில் 21 பேர் இருந்தனர். இதில், எட்டு குழந்தைகள் உட்பட 17 பேர் நச்சுப்புகையை சுவாசித்ததால் உயிரிழந்தனர். உயிரிழந்த குழந்தைகள், 10 வயதுக்குட்பட்டவர்கள்.

முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கு செல்லும் படிக்கட்டு மிகவும் குறுகலாக இருந்ததால், வெளியே ஓடி வர முடியவில்லை. இது குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

விபத்தில் உயிரிழந்தோருக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தோருக்கு தலா 50,000 ரூபாயும் நிவாரண நிதி வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us