முதல் கணவருக்கு பிறந்த குழந்தை விற்பனை சேலம் பெண் உட்பட ஐந்து பேர் கைது
முதல் கணவருக்கு பிறந்த குழந்தை விற்பனை சேலம் பெண் உட்பட ஐந்து பேர் கைது
முதல் கணவருக்கு பிறந்த குழந்தை விற்பனை சேலம் பெண் உட்பட ஐந்து பேர் கைது
ADDED : ஜூன் 18, 2025 10:22 PM
திருவனந்தபுரம்:முதல் கணவருக்கு பிறந்த 9 மாத பெண் குழந்தையை ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ததாக சேலத்தைச் சேர்ந்த தாய் உட்பட ஐந்து பேரை கேரள போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டம் திரூர் பகுதியில் சேலத்தைச் சேர்ந்தவர் கீர்த்தனா 30. சிவா என்ற இளைஞருடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். அவரிடம் 9 மாத பெண் குழந்தை இருந்தது . திடீரென்று அந்த குழந்தை இல்லாமல் அவர்கள் இருவர் மட்டும் வசித்தது அக்கம் பக்கத்தினர் இடையே சந்தேகத்தை ஏற்படுத்தியது.
திரூர் போலீசார் விசாரணையில் இருவரும் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தனர். இறுதியில் அவர்கள் அக்குழந்தையை ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்த விபரம் தெரியவந்தது. கீர்த்தனாவுக்கு ஏற்கனவே ஒருவருடன் திருமணம் நடந்து அதில் பிறந்ததுதான் அக்குழந்தை.
அந்த குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியே கீர்த்தனா சிவாவுடன் கேரளாவுக்கு வந்து குடியேறியுள்ளார். முதல் கணவருக்கு பிறந்த அக்குழந்தையை விற்பனை செய்துவிட தீர்மானித்த கீர்த்தனா, சிவா மற்றும் புரோக்கர்களான செந்தில்குமார், பிரேமலதா ஆகியோரின் உதவியுடன் கோழிக்கோட்டை சேர்ந்த ஆதிலட்சுமி என்பவருக்கு 3 லட்சம் ரூபாய் வரை பேசப்பட்ட நிலையில் ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர்.
இதை தொடர்ந்து கீர்த்தனா, சிவா, செந்தில்குமார், பிரேமலதா, ஆதிலட்சுமி ஆகிய ஐந்து பேரும் கைது செய்யப்பட்டனர். குழந்தை மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.