ஊழல் வழக்கில் சிக்கியுள்ள மாஜி கவர்னர் மருத்துவமனையில் கவலைக்கிடம்
ஊழல் வழக்கில் சிக்கியுள்ள மாஜி கவர்னர் மருத்துவமனையில் கவலைக்கிடம்
ஊழல் வழக்கில் சிக்கியுள்ள மாஜி கவர்னர் மருத்துவமனையில் கவலைக்கிடம்

புதுடில்லி: ரூ. 2,200 கோடி நீர்மின்திட்ட ஊழல் வழக்கில் முன்னாள் கவர்னர் சத்யபால் மாலிக் மீது சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ள நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பா.ஜ. மூத்த தலைவரான சத்யபால் மாலிக் பல்வேறு மாநிலங்களில் கவர்னராக பதவி வகித்துள்ளார். கடந்த 2018-19-ம் ஆண்டுகளில் ஜம்மு - காஷ்மீர் கவர்னராக, பதவி வகித்த போது, கிஷ்த்வார் மாவட்டத்தில் பாயும் செனாப் நதியில், பெரிய நீர் மின் உற்பத்தி திட்டத்துக்கு டெண்டர் விடப்பட்டது. அதில், விதிமுறைகளை பின்பற்றவில்லை எனவும் ரூ. 2,200 கோடி ஊழல் நடைபெற்றதாக புகார் எழுந்தது.
இதில் 'இரண்டு கோப்புகளில் கையெழுத்து போட, எனக்கு 300 கோடி ரூபாய் வரை சிலர் லஞ்சம் தர முயன்றனர்' என்றும் அப்போது தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த விவகாரத்தில் சி.பி.ஐ,, வழக்குப்பதிவு செய்தது. இதையடுத்து 2024 பிப்ரவரி யில் சத்யபால் மாலிக்கிற்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடந்தது.இந்ந வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சி.பி.,ஐ. திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த மே.11ம் தேதி சத்யபால் மாலிக்கிற்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து டில்லியில் உள்ள ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நேற்று மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், சத்யபால் மாலிக்கின் இரு சிறுநீரங்களும் செயல் இழந்துவிட்டன. ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றனர்.