முன்னாள் பிரதமர் தேவ கவுடா மருத்துவமனையில் அனுமதி
முன்னாள் பிரதமர் தேவ கவுடா மருத்துவமனையில் அனுமதி
முன்னாள் பிரதமர் தேவ கவுடா மருத்துவமனையில் அனுமதி
ADDED : அக் 07, 2025 06:40 PM

பெங்களூரு: முன்னாள் பிரதமரும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின்( ஜே.டி.(எஸ்))தலைவருமான தேவ கவுடா 92, இன்று காய்ச்சல் தொற்று காரணமாக, பழைய விமான நிலைய சாலையில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மணிப்பால் மருத்துவமனை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
முன்னாள் பிரதமர் தேவ கவுடா தொற்று காரணமாக இங்கு அனுமதிக்கப்பட்டார். தற்போது அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, மேலும் அவரது முன்னேற்றம் மருத்துவ நிபுணர்கள் குழுவால் கண்காணிக்கப்படுகிறது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


