50 ஜோடிகளுக்கு இலவச திருமணம்: முகேஷ் அம்பானி நடத்தி வைத்தார்
50 ஜோடிகளுக்கு இலவச திருமணம்: முகேஷ் அம்பானி நடத்தி வைத்தார்
50 ஜோடிகளுக்கு இலவச திருமணம்: முகேஷ் அம்பானி நடத்தி வைத்தார்
UPDATED : ஜூலை 02, 2024 09:11 PM
ADDED : ஜூலை 02, 2024 08:42 PM

மும்பை: தனது மகன் திருமணத்திற்கு முன்பாக 50 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை இன்று நடத்தி வைத்தார் தொழிலதிபர் முகேஷ் அம்பானி.
பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி, நீட்டா அம்பானி தம்பதியரின் மகன் ஆனந்த அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் வரும் ஜூலை 12-ம் தேதி மும்பையில் ஆடம்பரமாக நடக்க உள்ளது. இதில் தொழிலதிபர்கள், சினிமா, அரசியல், பிரபலங்கள் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில் மகன் திருமணத்திற்கு முன்பாக மகாராஷ்டிர மாநிலம் பால்கர் பகுதியை சேர்ந்த 50 ஏழை ஜோடிகளுக்கு ரிலையன்ஸ் கார்ப்பரேட் பூங்காவில் இலவச திருமணத்தை இன்று (02.07.2024) அம்பானி குடும்பத்தினர் நடத்தி வைத்தனர்.
திருமணத்தின் போது மணமகன் மற்றும் மணமகளுக்கு சீர்வரிசையாக தங்க மோதிரம், வெள்ளி மெட்டி, மூக்குத்தி மற்றும் வீட்டு உபயோக பொருள்களுடன் ரூ.1.01 லட்சம் மதிப்பிலான காசோலையும் பரிசாக தரப்பட்டது.