தொழிற்சாலையில் காஸ் கசிந்து 2 தொழிலாளர் பலி
தொழிற்சாலையில் காஸ் கசிந்து 2 தொழிலாளர் பலி
தொழிற்சாலையில் காஸ் கசிந்து 2 தொழிலாளர் பலி
ADDED : ஜன 23, 2024 05:36 AM
பீதர்: பீதர், ஹும்னாபாத் புறநகரின் தொழிற் பகுதியில், ஸ்ரீ பிரசன்ன ப்ரீ புரோசசிங் லிமிடெட் தொழிற்சாலை உள்ளது. நேற்று முன் தினம் நள்ளிரவு தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது காஸ் கசிந்ததில், தொழிலாளர்கள் முகமது ஷபாத், 21, இந்திரஜித், 23, ஆகிய இருவரும் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், தொழிலாளர்களின் உடல்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
சம்பவம் நடந்த தொழிற் சாலையை, பீதர் மாவட்ட கலெக்டர் கோவிந்த ரெட்டி, மாவட்ட எஸ்.பி., சென்ன பசவய்யா உட்பட, உயர் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர். தொழிற்சாலை பணிகளை நிறுத்தினர்.
“சுற்றுப்பகுதிகளில் காஸ் பரவவில்லை. பொதுமக்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை,” என, மாவட்ட கலெக்டர் கோவிந்த ரெட்டி தெரிவித்தார்.


