ADDED : பிப் 01, 2024 11:18 PM

சிக்கமகளூரு, சிருங்கேரியில் அமைந்துள்ள சாரதாம்பிகை கோவில், வரலாற்று பிரசித்தி பெற்றது. இங்கு மற்றொரு சரஸ்வதி கோவிலும் உள்ளது. கோவிலை தரிசித்தால், கல்வித்திறன் அதிகரிக்கும் என்பது மக்களின் நம்பிக்கை.
சரஸ்வதி கல்வி அறிவை அருளும் கடவுள் என்பது அனைவருக்கும் தெரியும். சிக்கமகளூரு, சிருங்கேரியில் உள்ள சாரதாம்பிகை கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.
பிற மாநிலங்கள் மட்டுமல்லாது, வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலா பயணியர் வருகை தருகின்றனர்.
இங்கு குடிகொண்டுள்ள சரஸ்வதி தேவி, கல்வி தேவதை, அறிவுக்கடவுள் என, பல பெயர்களில் அழைக்கப்படுகிறார். இந்த கோவில் சிக்கமகளூரின், அபூர்வமான கோவில்களில் ஒன்று.
இங்கு சென்று தரிசனம் செய்தால், மாணவர்களுக்கு அறிவு வளரும். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும் என்பது ஐதீகம். எனவே பலரும் தங்கள் பிள்ளைகளை, சாரதாம்பிகை கோவிலுக்கு அழைத்து வருகின்றனர்.
சிக்கமகளூரின் சீனிவாச நகரில் உள்ள சரஸ்வதி சிந்தாமணி கோவில் மீதும் இதே நம்பிக்கை உள்ளது.
பெற்றோர் தங்களின் பிள்ளைகளை, இங்கு அழைத்து வந்து எழுத வைக்கின்றனர்.
அதன்பின் பள்ளியில் சேர்க்கின்றனர். தேர்வு நடக்கும் போதும் கோவிலுக்கு வந்து பிரார்த்தனை செய்கின்றனர்.
சிக்கமகளூரில் உள்ள, இரண்டு சரஸ்வதி கோவில்களும், மாணவர்களை பொருத்த வரை, கல்வியை தரும் அற்புத கோவில்களாக உள்ளன
- நமது நிருபர் - .


