உத்தரகண்டில் மேகவெடிப்பால் கனமழை நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி 14 பேர் மாயம்
உத்தரகண்டில் மேகவெடிப்பால் கனமழை நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி 14 பேர் மாயம்
உத்தரகண்டில் மேகவெடிப்பால் கனமழை நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி 14 பேர் மாயம்
ADDED : செப் 18, 2025 11:45 PM

சமோலி: உத்தரகண்டில் மேக வெடிப்பு காரணமாக பெய்த கனமழையால் வெ ள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி 14 பேர் மாயமான நிலையில், 20 பேர் காயமடைந்து உள்ளனர்.
உத்தரகண்டில் தொடர்ந்து பருவமழை பெய்கிறது. இதனால் பல மாவட்டங்களில் நிலச்சரிவு, வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் பிற்பகலில் சமோலி மாவட்டத்தில் ஏற்பட்ட மேகவெடிப்பால் கனமழை பெய்தது.
மழை பாதிப்பு இதில் வீடுகள் இடிந்ததுடன், வயல்களில் தண்ணீர் சூழ்ந்து பயிர்கள் சேதமடைந்தன. நந்தன் நகர் பஞ்சாயத்தில் மட்டும் ஆறு வீடுகள் முற்றிலும் இடிந்து சேதமடைந்தன.
வெள்ளம் பெருக் கெடுத்து ஓடி வீடுகளில் புகுந்ததால் உடைமைகள் சேதமடைந்தன.
சமோலி மாவட்டத்தில் நந்தன் நகர் பகுதிக்கு உட்பட்ட குந்தாரி லகாபாலி, குந்தாரி லகாசர்பானி, சேரா மற்றும் துர்மா ஆகிய நான்கு கிராமங்களில் பேரழிவு ஏற்பட்டுள்ளது.
இந்த கிராமங்களில் 33 வீடுகள், கடைகள், மாட்டுக்கொட்டகைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
இது பற்றி அறிந்த தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப்படையினர், பாதிக்கப்பட்ட நான்கு கிராமங்களுக்கு சென்று மீட்புப்பணியில் ஈடுபடுகின்றனர்.
வெள்ளம் மற்றும் சகதியில் சிக்கி 14 பேர் மாயமாகியுள்ளனர்; 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
மழை பாதிப்பு குறித்து டேராடூனில் உள்ள அவசரநிலை செயல்பாட்டு மையத்தில் இருந்து, பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் புஷ்கர் சிங் தமி ஆய்வு செய்தார்.
இதுகுறித்து உத்தரகண்ட் முதல்வர் அலுவலகம் சமூகவலைதள பதிவில் கூறியுள்ளதாவது:
மழை வெள்ளம் பாதித்த பகுதியில் தேவையான நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப் பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை செய்ய அரசு ஊழியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மின் தடை, குடிநீர் இணைப்பு துண்டிப்பு போன்றவற்றை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க உத்தரவிடப் பட்டுள்ளது.
அவசர நிலை நந்தன் நகர் பகுதியில் பெய்த கனமழை கவலை அளிப்பதாக உள்ளது. அனைத்து துறைகளும் எச்சரிக்கையாக இருந்து அவசர நிலைகளை சமாளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
முன்னதாக கடந்த 16ம் தேதி டேராடூனில் ஏற்பட்ட மேக வெடிப்பால் 21 பேர் உயிரிழந்தனர்; 17 பேர் காணாமல் போயினர்.
மேக வெடிப்புகள் மற்று ம் கனமழையை அடுத்து, டேராடூனில் இருந்து பிரபலமான மலைவாசஸ்தலங்களுக்கு செல்லும் சாலை தொடர்ந்து இர ண்டாவது நாளாக மூடப்பட்டதால், முசோரியில் 2 ,500 சுற்றுலாப் பயணியர் சிக்கித் தவித்தனர்.