Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ புர்கா அணியாதவர்களுக்கு நரகம்: பள்ளி சிறுமி கருத்தால் சர்ச்சை

புர்கா அணியாதவர்களுக்கு நரகம்: பள்ளி சிறுமி கருத்தால் சர்ச்சை

புர்கா அணியாதவர்களுக்கு நரகம்: பள்ளி சிறுமி கருத்தால் சர்ச்சை

புர்கா அணியாதவர்களுக்கு நரகம்: பள்ளி சிறுமி கருத்தால் சர்ச்சை

Latest Tamil News
சாம்ராஜ் நகர்:'புர்கா அணிந்தவர்கள் இறந்த பின், அவர்கள் உடலுக்கு எதுவும் நடக்காது. ஆனால், குட்டையான உடை அணிந்தவர்களின் உடல்களை பாம்புகள், தேள்கள் தின்றுவிடும். அதுமட்டுமின்றி, அவர்கள் நரகத்திற்கு செல்வர்' என்ற நான்காம் வகுப்பு சிறுமியின் கருத்து, கர்நாடகாவில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

4ம் வகுப்பு


கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. இதில், முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த 4ம் வகுப்பு சிறுமி கலந்து கொண்டார். அவர், கண்காட்சியில் இரண்டு பொம்மைகளை வைத்து இருந்தார். அதில், புர்கா உடை அணிந்த ஒரு பொம்மையும், மேற்கத்திய உடை அணிந்த பொம்மையும் வைக்கப்பட்டு இருந்தன.

இந்த இரண்டு பொம்மைகளுக்கு பக்கவாட்டில், பொம்மை சவப்பெட்டிகளும் வைக்கப்பட்டிருந்தன. இதில், புர்கா உடை அணிந்த பொம்மையின் பக்கத்தில் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டியின் மீது பூக்கள் வைக்கப்பட்டு இருந்தன. மேற்கத்திய உடை அணிந்த பொம்மைக்கு அருகில் வைக்கப்பட்டு இருந்த சவப்பெட்டியின் மீது தேள், பாம்பு போன்ற உருவங்கள் வரையப்பட்டு இருந்தன.

தேள்கள் தின்றுவிடும்


இதற்கு விளக்கம் அளித்து, சிறுமி கூறியதாவது: புர்கா உடை அணிந்தவர்களின் உடலுக்கு இறந்த பின்பு எதுவும் நடக்காது. ஆனால், குட்டையான உடை அணிந்தவர்களின் உடல்களை பாம்புகள், தேள்கள் தின்றுவிடும். அதுமட்டுமின்றி, அவர்கள் நரகத்திற்கு செல்வர். புர்கா அணியாமல், தன் மனைவியை வெளியே நடமாட அனுமதிக்கும் கணவர், மிகவும் மோசமானவர். இவ்வாறு அவர் கூறினார்.

கண்டனம்


இது வீடியோவாக, நேற்று முன்தினம் இணையத்தில் பரவியது. இந்த வீடியோ கடந்த ஜனவரி 5ம் தேதி எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

சாம்ராஜ் நகர் பொதுக்கல்வி துணை இயக்குனர் ராஜேந்திர ராஜே அர்ஸ் கூறுகையில், ''இது குறித்து சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வட்டார கல்வி அலுவலரிடம் அறிக்கை சமர்ப்பிக்கும்படி கூறியுள்ளேன். விரைவில் முழுமையான பதில் அளிக்கப்படும்,” என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us