Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/தங்க கவசம் எடை குறைந்தது எப்படி? சிறப்பு புலனாய்வு குழு அமைத்தது ஐகோர்ட்

தங்க கவசம் எடை குறைந்தது எப்படி? சிறப்பு புலனாய்வு குழு அமைத்தது ஐகோர்ட்

தங்க கவசம் எடை குறைந்தது எப்படி? சிறப்பு புலனாய்வு குழு அமைத்தது ஐகோர்ட்

தங்க கவசம் எடை குறைந்தது எப்படி? சிறப்பு புலனாய்வு குழு அமைத்தது ஐகோர்ட்

UPDATED : அக் 07, 2025 07:52 AMADDED : அக் 07, 2025 02:50 AM


Google News
Latest Tamil News
கொச்சி: சபரிமலை அய்யப்பன் கோவிலில் உள்ள துவாரபாலகர்கள் சிலைகளுக்கு அணிவிக்கப்பட்ட தங்க கவசத்தின் எடை குறைந்ததாக எழுந்த புகார் குறித்து விசாரிக்க, கேரள உயர் நீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்துள்ளது.

கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது.

செப்பு கவசங்கள்


இம்மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெ ற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலின் கருவறை முன்பாக உள்ள துவாரபாலகர்கள் சிலைக்கு தங்கமுலாம் பூசிய செப்பு கவசங்களை பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி என்பவர் நன்கொ டையாக வழங்கினார்.

இந்த தங்க கவசத்தை பழுது பார்த்து, 'எலக்ட்ரோ பிளேட்டிங்' செய்ய, சென்னையில் உள்ள தொழிற்சாலைக்கு திருவிதாங்கூர் தேவசம் போர்டு அனுப்பி வைத்தது.

அப்போது தேவசம் போர்டு ஆணையரின் அனுமதியின்றி, தங்க கவசம் கழற்றப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.

இதனால், சென்னைக்கு எடுத்துச் செல்லப்பட்ட தங்க கவசங்களை உடனடியாக திரும்ப கொண்டு வருமாறு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

அதே நேரம், தங்க கவசத்தின் எடை 4 கிலோ வரை குறைந்து இருப்பதாக புகார் எழுந்தது. மேலும், துவாரபாலகர்களின் தங்க பீடமும் மாயமானதாக குற்றஞ் சாட்டப்பட்டது.

இதைத் தொடர்ந்து, இது குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி தேவசம் போர்டின் ஊழல் தடுப்பு குழுவுக்கு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நன்கொடை அதன் அடிப்படையில் விசாரணை நடத்திய ஊழல் தடுப்புக் குழு, காணாமல் போனதாக கூறப்பட்ட தங்க பீடத்தை, நன்கொடையாளர் உன்னிகிருஷ்ணன் போத்தியின் உதவியாளரிடம் இருந்து மீட்டது.

பழுது பார்த்த பின், பீடம் சரியாக பொருந்தாததால், மீண்டும் தேவசம் போர்டு தன் உதவியாளரிடம் கொடுத்து அனுப்பியதாகவும், அந்த விவகாரத்தை தான் மறந்து போனதாகவும் உன்னிகிருஷ்ணன் போத்தி விளக்கம் அளித்திருந்தார்.

இது தொடர்பாக இரண்டு நாட்கள் வரை உன்னிகிருஷ்ணனிடம் விசாரணை நடத்திய தேவசம் போர்டு ஊழல் தடுப்புக் குழு, கேரள உயர் நீதிமன்றத்தில் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்திருந்தது.

இதை தொடர்ந்து துவாரபா லகர்கள் சிலையில் அணிவிக்கப்பட்ட தங்க கவசத்தின் எடை குறைந்தது குறித்து விசாரிக்க, சிறப்பு புலனாய்வு குழுவை கேரள உயர் நீதிமன்றம் நேற்று அமைத்தது.

எஸ்.பி., சசிதரன் தலைமையில், ஏ.டி.ஜி.பி., வெங்கடேஷ் மேற்பார்வையில், இக்குழு செயலாற்றும் எனவும் அறிவித்துள்ளது. சைபர் கிரைம் பிரிவை சேர்ந்த அதிகாரிகளும் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

கேரள உயர் நீதிமன்றத்தின் இந்நடவடிக்கைக்கு தேவசம் போர்டு அமைச்சர் வாசவன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us