தலைமை நீதிபதியை தாக்கியதில் வருத்தமில்லை: சொல்கிறார் வழக்கறிஞர்
தலைமை நீதிபதியை தாக்கியதில் வருத்தமில்லை: சொல்கிறார் வழக்கறிஞர்
தலைமை நீதிபதியை தாக்கியதில் வருத்தமில்லை: சொல்கிறார் வழக்கறிஞர்

புதுடில்லி : '' தலைமை நீதிபதி மீது காலணியை வீசியதற்கு பயப்படவில்லை. அதற்கு வருத்தப்படவும் இல்லை'' என அதனை செய்த வழக்கறிஞர் கூறியுள்ளார்.
உச்சநீதிமன்றத்தில் நேற்று வழக்கு விசாரணையின் போது, வழக்கறிஞர் ஒருவர், தன் காலில் அணிந்து இருந்த காலணியை கழற்றி தலைமை நீதிபதி கவாயை நோக்கி எறிய முயன்றார். அருகில் இருந்தவர்கள் அந்த நபரை மடக்கி பிடித்து வெளியே இழுத்துச் சென்றனர். இதனால் சலசலப்பு ஏற்பட்டது. அவரை சஸ்பெண்ட் செய்து பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் காலணியை வீசிய ராகேஷ் கிஷோர் என்ற வழக்கறிஞர் அளித்த பேட்டியில் கூறியதாவது: எனது பெயர் ராகேஷ் கிஷோர். இதனை வைத்து யாராவது என் ஜாதியை சொல்ல முடியுமா?
செப்டம்பர் 16 ம் தேதி தலைமை நீதிபதி முன்பு பொது நல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்படுகிறது. அதனை கிண்டல் செய்த அவர், சிலையிடம் சென்று வழிபடுங்கள். அதன் தலையை மீட்டெடுக்க சொல்லுங்கள் என்றார்.
நுபுர் ஷர்மா வழக்கு விசாரணைக்கு வரும் போது, அவர் சூழ்நிலையை மாற்றிவிட்டார் என நீதிமன்றம் சொன்னது. ஆனால், சனாதன தர்மம் குறித்த விஷயம் வரும் போது, நீதிமன்றம் இதுபோன்ற உத்தரவை பிறப்பிக்கிறது. மனுதாரருக்கு நிவாரணம் வழங்காமல், அவரை கேலி செய்யாதீர்கள். நான் காயப்பட்டுள்ளேன். நான் மதுபோதையில் இல்லை. இது தான் அவரது செயலுக்கு எதிர்வினை. எனக்கு பயமில்லை. நடந்ததற்கு வருத்தப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


