Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ பாகிஸ்தானை சொந்த நாடாக உணர்ந்தேன் காங்., சாம் பிட்ரோடா மீண்டும் சர்ச்சை

பாகிஸ்தானை சொந்த நாடாக உணர்ந்தேன் காங்., சாம் பிட்ரோடா மீண்டும் சர்ச்சை

பாகிஸ்தானை சொந்த நாடாக உணர்ந்தேன் காங்., சாம் பிட்ரோடா மீண்டும் சர்ச்சை

பாகிஸ்தானை சொந்த நாடாக உணர்ந்தேன் காங்., சாம் பிட்ரோடா மீண்டும் சர்ச்சை

ADDED : செப் 20, 2025 02:28 AM


Google News
Latest Tamil News
புதுடில்லி : ''பாகிஸ்தானுக்கு சென்றிருக்கிறேன். அப்போது சொந்த நாட்டில் இருப்பது போல உணர்ந்தேன்,'' என, காங்., வெளிநாட்டு பிரிவு தலைவர் சாம் பிட்ரோடா தெரிவித்துள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

காங்., வெளிநாட்டு பிரிவு தலைவராக இருப்பவர் சாம் பிட்ரோடா, 83. அமெரிக்காவின் சிகாகோவில் வசித்து வரும் இவர், காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலுக்கு மிகவும் நெருக்கமானவர்.

நம் நாட்டைப் பற்றி அவ்வப்போது அவதுாறாக பேசி வாங்கிக் கட்டிக் கொள்வது இவரது வழக்கம்.

இந்நிலையில், ஐ.ஏ.என்.எஸ்., செய்தி நிறுவனத்துக்கு, காங்., வெளிநாட்டு பிரிவு தலைவர் சாம் பிட்ரோடா அளித்த பேட்டி:

என்னை பொறுத்தவரை, நம் அண்டை நாடுகளுடன் முதலில் நல்லுறவை பேண வேண்டும் என்பதே காங்கிரசின் வெளியுறவுக் கொள்கை.

நல்லுறவை உண்மையில் கணிசமாக மேம்படுத்த முடியுமா? நான் பாகிஸ்தானுக்கு சென்றிருக்கிறேன். அப்போது சொந்த நாட்டில் இருப்பது போல உணர்ந்தேன்.

நேபாளம், வங்கதேசத்துக்கும் சென்றிருக்கிறேன். அப்போது ம் அப்படி தான் உணர்ந்தேன். காங்கிரசுக்கும், ஜார்ஸ் சோரஸ் அறக்கட்டளைக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதில் பா.ஜ., வினர் கூறுவது பொய். அடிப்படை ஆதாரம் இல்லாமல் அக்கட்சியினர் கு ற்றஞ்சாட்டுவது, வேடிக்கையாக இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பாக்., விருப்பம்!

ராகுலுக்கு நெருக்கமானவரான சாம் பிட்ரோடா, பாகிஸ்தானை சொந்த நாடாகக் குறிப்பிட்டு, நம் ஆயுதப்படைகளை அவமதித்துள்ளார். 140 கோடி மக்களின் உணர்வுகளையும் புண்படுத்தி உள்ளார். 2008 மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு பின், பாகிஸ்தானுக்கு எதிராக, அப்போது மத்தியில் இருந்த காங்., அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது இப்போது புரிகிறது. பாக்., விருப்பமாக காங்., உள்ளது. பிரதீப் பண்டாரி, செய்தித் தொடர்பாளர், பா.ஜ.,







      Our Apps Available On




      Dinamalar

      Follow us