சர்வதேச விமான போக்குவரத்து துறையில் இந்தியாவின் பங்கு அபரிமிதம்: பிரதமர் மோடி பெருமிதம்
சர்வதேச விமான போக்குவரத்து துறையில் இந்தியாவின் பங்கு அபரிமிதம்: பிரதமர் மோடி பெருமிதம்
சர்வதேச விமான போக்குவரத்து துறையில் இந்தியாவின் பங்கு அபரிமிதம்: பிரதமர் மோடி பெருமிதம்
ADDED : ஜூன் 02, 2025 06:39 PM

புதுடில்லி: சர்வதேச விமான போக்குவரத்து துறையில் இந்தியா முக்கிய பங்கு வகிப்பதாக பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார்.
சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் சார்பில் ஆண்டு விழாக் கூட்டம் புதுடில்லியில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது;
உலக விமான போக்குவரத்து துறையில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. பூமியில் நகரங்களுக்கு மத்தியிலான பகுதிகளில் மட்டும் நமது பயணம் கட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கிறது.
விண்வெளிக்கு பயணம் என்பதை வணிகமயமாக்கி அதை மனிதர்கள் பயணிக்கும் வண்ணம் மாற்ற வேண்டும் என்ற கனவில் மனிதர்கள் இருக்கின்றனர்.
அதற்கு இன்னும் சிறிதுகாலம் இருக்கிறது என்பது உண்மையே. இந்த மாற்றம், புதுமைக்கான ஒரு பெரிய மாற்றமாகவும், விமான போக்குவரத்து எவ்வளவு பெரிதாக இருக்கும் என்பதையே காட்டுகிறது. அதை கட்டமைப்பதற்கான மூன்று வலுவான அம்சங்கள் நம்மிடம் உள்ளன.
முதலாவதாக அதற்கான சந்தையும், மனிதவளமும் புதுமையை படைக்க விரும்பும் திறமையான மக்களும் உள்ளனர். செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ், எரிசக்தி துறைகளில் புதிய சகாப்தங்களை கண்டுபிடிப்பவர்களாக உள்ளனர். மூன்றாவதாக தொழில்துறைக்கான கொள்கை உள்ளது.
இந்த 3 திறன்களின் அடிப்படையில் நாட்டின் விமான போக்குவரத்து துறையை வேறு ஒரு புதிய உச்சத்துககு கொண்டு செல்ல வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.