இந்திய விண்வெளி வீரர் சுக்லாவின் விண்வெளி நிலைய பயணம் மீண்டும் ஒத்திவைப்பு
இந்திய விண்வெளி வீரர் சுக்லாவின் விண்வெளி நிலைய பயணம் மீண்டும் ஒத்திவைப்பு
இந்திய விண்வெளி வீரர் சுக்லாவின் விண்வெளி நிலைய பயணம் மீண்டும் ஒத்திவைப்பு
ADDED : ஜூன் 11, 2025 07:11 AM

புதுடில்லி: சர்வதேச விண்வெளி மையத்துக்கு வீரர்கள் இன்று (ஜூன் 11) செல்ல இருந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பயண திட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
'நாசா' மற்றும் இஸ்ரோ இணைந்து, 'ஆக்ஸியம் ஸ்பேஸ் ஆக்ஸ்- 4' என்ற திட்டத்தின் கீழ், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை அனுப்ப உள்ளது. இதில், இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் அமெரிக்காவிலிருந்து 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தின் 'பால்கன் 9' ராக்கெட் வாயிலாக சர்வதேச விண்வெளி மையத்திற்கு இன்று (ஜூன் 11) மாலை 5:30 மணிக்கு புறப்பட இருந்தனர்.
இந்நிலையில் பால்கன் 9 ராக்கெட்டில் திரவ ஆக்சிஜன் கசிவு ஏற்பட்டதால் விண்வெளி பயணம் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இதனால், இன்று மாலை 5.30 மணிக்கு ஏவப்படவிருந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. ஏற்கனவே மோசமான வானிலை காரணமாக சுக்லாவின் பயணம் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
41 ஆண்டுகளுக்கு பின் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை சுபான்ஷு சுக்லா பெற உள்ளார். இதற்கு முன், 1984ல் ரஷ்யாவின் சோயுஸ் திட்டத்தின் கீழ், இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா, விண்வெளிக்கு பயணம் செய்தார்.