துருக்கியை புறக்கணிக்கும் இந்தியர்கள்
துருக்கியை புறக்கணிக்கும் இந்தியர்கள்
துருக்கியை புறக்கணிக்கும் இந்தியர்கள்
ADDED : மே 13, 2025 04:35 AM

புதுடில்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவிய சூழலில், துருக்கி மற்றும் அஜர்பைஜான் நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டதால், அந்த நாடுகளுக்கு சுற்றுலா செல்வதை இந்தியர்கள் தவிர்க்க துவங்கியுள்ளனர்.
இந்தியா - பாக்., சண்டையில் பிற நாடுகள் அமைதி காத்து வந்த நிலையில், துருக்கி மற்றும் அஜர்பைஜான் நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தன. இந்தியாவில், இந்த இரு நாடுகளுக்கும் கடுமையான எதிர்ப்பு எழுந்தது.
கடந்தாண்டில் மட்டும் 3.3 லட்சம் இந்திய சுற்றுலா பயணியர் துருக்கி சென்று வந்துள்ளனர். கடந்த, 2024ல், 2.43 லட்சம் பேர் இந்தியாவிலிருந்து அஜர்பைஜான் சென்று வந்துள்ளனர். இவ்விரு நாடுகளுக்குமான சுற்றுலா பயணத்தை, பலரும் தாங்களாகவே ரத்து செய்து வருகின்றனர்.
பல சுற்றுலா ஏற்பாட்டாளர்கள், இவ்விரு நாடுகளுக்கும் செல்வதை தவிர்க்குமாறு இந்திய பயணியரை கேட்டு வருகின்றனர். தமிழகத்திலிருந்து மட்டும் இந்த இரு நாடுகளுக்கும் செல்லவிருந்த 700 பேர், தங்கள் பயணத்தை ரத்து செய்துள்ளனர்.