உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதலாவது நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பல்: இந்திய கடற்படையில் இணைந்தது
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதலாவது நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பல்: இந்திய கடற்படையில் இணைந்தது
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதலாவது நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பல்: இந்திய கடற்படையில் இணைந்தது
ADDED : ஜூன் 18, 2025 04:40 PM

புதுடில்லி: இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதலாவது நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பலான ஐஎன்எஸ் அர்னாலா, இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடந்த நிகழ்ச்சியில், இந்திய கடற்படை தளபதி அனில் சவுஹான் இந்த கப்பலை கடற்படையிடம் ஒப்படைத்தார்.
பொது மற்றும் தனியார் ஒத்துழைப்பின் கீழ் கோல்கட்டாவைச் சேர்ந்த Garden Reach Shipbuilders and Engineers (GRSE) என்ற நிறுவனம் இந்த கப்பலை கட்டியது. கடந்த மே மாதம் 8 ம் தேதி தமிழகத்தின் காட்டுப்பள்ளி துறைமுகத்தில் எல் அண்ட் டி கப்பல் கட்டும் தளத்தில் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்திய கடலோர பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக உள்நாட்டில் கட்டப்பட்டு வரும் நீர்மூழ்கி போர்க் கப்பல்களில் முதலாவதாக இது கட்டி முடிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கையில் கூறியதாவது: இந்த கப்பல் நீருக்கு அடியில் கண்காணிப்பு, தேடல் மற்றும் மீட்பு மற்றும் தீவிர கடல் சார்நடவடிக்கைகள் ஆகியவற்றுக்காக வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த கப்பல் கடற்படையில் இணைவதன் மூலம்,கடலோர பகுதிகளில் நீர்மூழ்கி கப்பலுக்கு எதிரான இந்திய கடற்படையின் பலம் வலிமை பெறும். தன்னிறைவு இந்தியா என்ற மத்திய அரசின் திட்டத்திற்கு ஒரு முக்கிய மைல்கல்லாக இருக்கும் எனக்கூறப்பட்டு உள்ளது.