காதல் கசந்ததால் பலாத்கார வழக்கா? ஏற்க முடியாது என கோர்ட் உத்தரவு!
காதல் கசந்ததால் பலாத்கார வழக்கா? ஏற்க முடியாது என கோர்ட் உத்தரவு!
காதல் கசந்ததால் பலாத்கார வழக்கா? ஏற்க முடியாது என கோர்ட் உத்தரவு!
ADDED : மே 27, 2025 07:36 AM

புதுடில்லி : திருமணம் செய்வதாக ஆசைகாட்டி பாலியல் உறவு கொண்டதாக, ஆணின் மீது பலாத்கார வழக்கு பதிவு செய்வதை ஏற்க முடியாது என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
மஹாராஷ்டிர மாநிலம் சதாராவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த, நீதிபதிகள் நாகரத்தினா, சதீஷ் சந்திர சர்மா அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, உத்தரவில் கூறியுள்ளதாவது:
இந்த குறிப்பிட்ட வழக்கில், கணவனை விவாகரத்து செய்யாத நிலையிலும், இந்த இளைஞருடன் இந்த பெண் உறவில் இருந்துள்ளார். ஒரு கட்டத்தில், முஸ்லிம் சட்டத்தின்படி, கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று, இந்த இளைஞருடன் அந்தப் பெண் சேர்ந்து வாழ்ந்துள்ளார். அதுவும், நான்கு வயது குழந்தை உள்ள நிலையில்.
இவ்வாறு, 2022 ஜூன் முதல் 2-023 ஜூலை வரை இருவரும் காதலித்ததுடன், சேர்ந்து வாழ்ந்துள்ளனர். இந்நிலையில், 2023 ஜூலையில், திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாக, அந்த இளைஞர் மீது பாலியல் பலாத்கார புகாரை கூறியுள்ளார்.
இவ்வாறு திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாக பலாத்கார வழக்கு தொடர்வது என்பது, சட்டத்தை தவறாக பயன்படுத்துவதாகும். இவ்வாறு நீதிமன்றங்களில் அதிக வழக்குகள் பதிவாகின்றன. மேலும், தனிநபரின் கண்ணியத்தை சீர்குலைப்பதாகும்.
சேர்ந்து வாழும்போது அல்லது காதலிக்கும்போது, நன்கு தெரிந்துதான், பரஸ்பரம் உடலுறவு கொள்கின்றனர். ஆனால், காதல் கசந்தபின் அல்லது பிரிந்து சென்றதும், பலாத்கார வழக்கு தொடர்கிறார்கள். இதை ஏற்க முடியாது. அதனால், அந்த இளைஞரை, வழக்கில் இருந்து விடுவிக்கிறோம். இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.