வயநாடு தொகுதியில் பிரியங்கா போட்டியா?
வயநாடு தொகுதியில் பிரியங்கா போட்டியா?
வயநாடு தொகுதியில் பிரியங்கா போட்டியா?
UPDATED : ஜூன் 14, 2024 06:59 AM
ADDED : ஜூன் 14, 2024 12:43 AM

மலப்புரம்: வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய ராகுல் முடிவு செய்துள்ள நிலையில் பிரியங்காவுக்கு விட்டுக்கொடுக்க உள்ளதா தகவல் வெளியாகியுள்ளது.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், கேரளாவின் வயநாடு தொகுதியிலும் தன் தாயார் சோனியாவின் உ.பி.,யின் ரேபரேலி தொகுதியிலும் போட்டியிட்ட ராகுல், இரு தொகுதிகளிலும் ராகுல் வெற்றி பெற்றார். சட்டப்படி, அவர் ஒரு தொகுதியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும். எந்த தொகுதியை அவர் விட்டுக் கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, நேற்று முன்தினம், ரேபரேலி தொகுதியில் மக்களை சந்தித்த ராகுல், தனக்கு ஓட்டளித்ததற்காக நன்றி தெரிவித்தார்.
இந்நிலையில் வெளியான செய்தியில், வயநாடு தொகுதியில் தங்கை பிரியங்காவை போட்டியிட வேண்டி விட்டுக்கொடுக்கலாம் என உறுதி செய்யப்படாத செய்திகள் வெளியாகியுள்ளன. இருப்பினும் பிரியங்காவை போட்டியிட வைக்க காங்., மேலிடம் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.