ஒன்பது மாதத்துக்குள் தாவ வேண்டிய நிர்பந்தம் ஜெகதீஷ் ஷெட்டரை மட்டம் தட்டிய காங்., அமைச்சர்
ஒன்பது மாதத்துக்குள் தாவ வேண்டிய நிர்பந்தம் ஜெகதீஷ் ஷெட்டரை மட்டம் தட்டிய காங்., அமைச்சர்
ஒன்பது மாதத்துக்குள் தாவ வேண்டிய நிர்பந்தம் ஜெகதீஷ் ஷெட்டரை மட்டம் தட்டிய காங்., அமைச்சர்

மீண்டும் தாய் கட்சி
ஆனால் கடந்த வாரம் காங்கிரஸ் தலைவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துவிட்டு, தாய் கட்சியான பா.ஜ.,வுக்கே மீண்டும் சென்றுவிட்டார். இதன் பின்னணியில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா, பா.ஜ., மாநில தலைவர் விஜயேந்திராவின் கை வண்ணமும் உள்ளது. பா.ஜ.,வுக்கு திரும்பிய ஜெகதீஷ் ஷெட்டர், இதுவரை காங்கிரஸ் கட்சி மீது எந்த புகாரும் கூறவில்லை.
பனிப்போர்
காங்கிரஸ் கட்சியின் மூத்த அமைச்சர்களில் ஒருவர் எம்.பி.பாட்டீல். லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த இவருக்கு, வட மாவட்டங்களில் செல்வாக்கு உள்ளது. கர்நாடகா காங்கிரஸ் பிரசார குழு தலைவராகவும் உள்ளார். முதல்வர் சித்தராமையாவின் தீவிர ஆதரவாளரும் கூட.
பிரசார குழு உறுப்பினர்
ஆனால் முதல்வர் சித்தராமையாவின் ஆதரவு அமைச்சர் என்பதால், எம்.பி.பாட்டீலை, ஒன்றுமே செய்ய முடியவில்லை. இதற்கிடையில் ஜெகதீஷ் ஷெட்டர் அமைச்சர் பதவி எதிர்பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை. இதனால் காங்கிரஸ் பிரசார குழுத் தலைவராக விரும்பினார். ஆனால் எக்காரணம் கொண்டும் அந்த பதவியை விட்டு தர மாட்டேன் என்று, எம்.பி.பாட்டீல் பிடிவாதம் பிடித்துள்ளார். வேண்டும் என்றால் பிரசார குழுவில், ஒரு உறுப்பினராக ஷெட்டரை சேர்த்துக் கொள்கிறேன் என்றும் கூறி இருக்கிறார்.


