லோக்சபா தேர்தலில் குமாரசாமி போட்டி? 5 தொகுதிகளில் நடத்திய ஆய்விலும் 'சக்சஸ்'
லோக்சபா தேர்தலில் குமாரசாமி போட்டி? 5 தொகுதிகளில் நடத்திய ஆய்விலும் 'சக்சஸ்'
லோக்சபா தேர்தலில் குமாரசாமி போட்டி? 5 தொகுதிகளில் நடத்திய ஆய்விலும் 'சக்சஸ்'
ADDED : பிப் 12, 2024 06:38 AM

லோக்சபா தேர்தலில் குமாரசாமி போட்டியிடும் பட்சத்தில் ஐந்து தொகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வில், எங்கு நின்றாலும் வெற்றி பெறுவார் என தெரிய வந்துள்ளது. இதனால் அக்கட்சி தலைவர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர்.
கடந்த லோக்சபா தேர்தலில், காங்கிரசுடன் கூட்டணி அமைத்த ம.ஜ.த., ஒரு தொகுதியில் மட்டுமே, அதுவும் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா வெற்றி பெற்றார்.
இம்முறை கூட்டணி மாறி உள்ளது. பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி அமைத்துள்ளது. ம.ஜ.த.,வுக்கு எத்தனை தொகுதி என இன்னும் முடிவாகவில்லை. ம.ஜ.த., மாநில தலைவர் குமாரசாமி, அவ்வப்போது புதுடில்லியில் பா.ஜ., மேலிட தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார்.
ம.ஜ.த., கேட்கும் தொகுதியை பா.ஜ., தரும்பட்சத்தில், இரண்டு முதல் மூன்று தொகுதிகளில், குமாரசாமி, பிரஜ்வல் ரேவண்ணா, நிகில் குமாரசாமி ஆகியோரை களமிறக்கலாம் என நினைக்கின்றனர். இதில் யாராவது இருவர் போட்டியிடுவது உறுதி என்றும் கூறப்படுகிறது.
ஐந்து தொகுதிகள்
பா.ஜ.,விடம் மாண்டியா, ஹாசன், சிக்கபல்லாபூர், கோலார், பெங்களூரு ரூரல் என ஐந்து தொகுதிகளை ம.ஜ.த., கேட்பதாக தெரிகிறது. இதில், ஹாசனில் பிரஜ்வல் ரேவண்ணா போட்டியிடுவது உறுதி.
இந்நிலையில், முன்னாள் முதல்வர் குமாரசாமி எங்கிருந்து போட்டியிட வேண்டும் என்று ம.ஜ.த., சார்பில் 'சர்வே' நடத்தப்பட்டதாம்.
இதன்படி, மாநிலத்தின் எந்த தொகுதிகளில் போட்டியிட்டாலும் குமாரசாமி வெற்றி பெறுவார். மாண்டியா, பெங்களூரு ரூரல், துமகூரு, பெங்களூரு வடக்கு, சிக்கபல்லாபூர் என இந்த தொகுதிகளில் குமாரசாமி எளிதாக வெற்றி பெறுவாராம்.
இதனால் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர். எனவே, லோக்சபா தேர்தலில் குமாரசாமி போட்டியிடுவது உறுதி என ம.ஜ.த.,வினர் கூறுகின்றனர்.
பெங்களூரு வடக்கில் தற்போதைய பா.ஜ., - எம்.பி., சதானந்த கவுடா அரசியல் ஓய்வு அறிவித்திருந்தார்; பின், மீண்டும் போட்டியிடுவேன் என கூறினார். பா.ஜ.,வோ, சி.டி.ரவி, சுமலதா உட்பட பலரின் பெயரை பரிசீலித்து வருகிறது. மாண்டியாவில் குமாரசாமியின் மகன் நிகில் நிறுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.
காங்., தலைவர் தம்பி
பெங்களூரு ரூரல் தொகுதிக்கு உட்பட்ட ராம்நகர், சென்னபட்டணா, நெலமங்களா, மாகடி உட்பட எட்டு சட்டசபை தொகுதிகளில் ம.ஜ.த.,வுக்கு அதிக செல்வாக்கு உள்ளது. எனவே இத்தொகுதியையும் அவர்கள் கேட்க வாய்ப்பு உள்ளது. இத்தொகுதியில் தான், மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமாரின் தம்பி டி.கே.சுரேஷ் எம்.பி.,யாக உள்ளார்.
துமகூரில் பா.ஜ.,விற்குள் உள்ளூர், வெளியூர் ஆட்கள் என்ற பேதம் உருவாகி உள்ளது. சிக்கபல்லாபூரில் முன்னாள் அமைச்சர் சுதாகருக்கும், எலஹங்கா பா.ஜ., - எம்.எல்.ஏ., விஸ்வநாத் தனது மகனுக்கு 'சீட்' கேட்டுள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது நமது நிருபர் -.