6,000 ரூபாய் கடனுக்காக நண்பனை கொன்றவர் கைது
6,000 ரூபாய் கடனுக்காக நண்பனை கொன்றவர் கைது
6,000 ரூபாய் கடனுக்காக நண்பனை கொன்றவர் கைது
ADDED : மார் 16, 2025 01:02 AM

பாலக்காடு:பாலக்காடு அருகே கடனாக கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டதில் ஏற்பட்ட பிரச்னையால், வாலிபரை கொலை செய்தவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், வடக்கஞ்சேரி அஞ்சுமூர்த்திமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் மனு, 24. இவர், அதே பகுதியைச் சேர்ந்த நண்பர் விஷ்ணு, 23, என்பவரிடம், 6,000 ரூபாய் கடனாக பெற்று, திருப்பிக் கொடுக்காமல் இருந்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு இருவரும் வயலில் மது அருந்தினர். அப்போது, கடனாக கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார். இதனால், அவர்களிடையே கைகலப்பு ஏற்பட்டது. அப்போது, பணத்தை திருப்பி செலுத்தாத மனுவை, விஷ்ணு கத்தியால் குத்தினார்.
படுகாயமடைந்து, ரத்த வெள்ளத்தில் மனு மயங்கியதைக் கண்டதும், அங்கிருந்த விஷ்ணு தப்பினார்.
அவ்வழியாக சென்ற மக்கள், மனுவை மீட்டு ஆலத்துார் தாலுகா மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். வடக்கஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விஷ்ணுவை நேற்று கைது செய்தனர்.