மலப்புரத்தில் உலா வரும் ஆட்கொல்லி புலி; துப்பாக்கியுடன் தீவிரமாக தேடும் வனத்துறையினர்
மலப்புரத்தில் உலா வரும் ஆட்கொல்லி புலி; துப்பாக்கியுடன் தீவிரமாக தேடும் வனத்துறையினர்
மலப்புரத்தில் உலா வரும் ஆட்கொல்லி புலி; துப்பாக்கியுடன் தீவிரமாக தேடும் வனத்துறையினர்
ADDED : மே 22, 2025 08:35 AM

மலப்புரம்: கேரளாவில் மனிதர்களை வேட்டையாடும் புலியை பிடிக்க, வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கலிகாவு பகுதியை சேர்ந்த கபூர், 45, என்ற ரப்பர் தோட்டத் தொழிலாளியை புலி தாக்கி கொன்றது. மேலும், அவரது உடலை 200 மீ., தொலைவுக்கு காட்டுக்குள் இழுத்துச் சென்றது.
இது குறித்து அறிந்து வந்த வனத்துறையினர், கபூர் உடலை மீட்டனர். அங்கு திரண்டு வந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, 'புலி நடமாட்டம் குறித்து வனத்துறையினருக்கு பல மாதங்களுக்கு முன்பே தெரிவித்தோம். ஆனால் அவர்கள் புலியை பிடிக்க முயற்சிக்கவில்லை' என, அவர்கள் குற்றம்சாட்டினர்.
இந்த நிலையில், பந்தேர் சுல்தான் எஸ்டேட் பகுதியில், மனிதர்களை குறிவைத்து தாக்கி கொல்லும் புலியின் நடமாட்டத்தைக் கண்டதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, புலியை மயக்க மருந்து செலுத்தி பிடிப்பதற்காக, துப்பாக்கியுடன் வனத்துறையினர் அங்கு வந்தனர். தொடர்ந்து, இரவு பகலாக புலியை பல இடங்களில் தேடி வருகின்றனர்.