பிரதமரை சந்திப்பது புது நம்பிக்கை கொடுக்கும்; ஷூபம் திவேதியின் குடும்பத்தினர் பேட்டி
பிரதமரை சந்திப்பது புது நம்பிக்கை கொடுக்கும்; ஷூபம் திவேதியின் குடும்பத்தினர் பேட்டி
பிரதமரை சந்திப்பது புது நம்பிக்கை கொடுக்கும்; ஷூபம் திவேதியின் குடும்பத்தினர் பேட்டி
ADDED : மே 24, 2025 04:45 PM

கான்பூர்: நாட்டுக்காக செய்யப்படும் தியாகங்களுக்கு மிகவும் மதிப்பு கொடுக்கும் பிரதமர் மோடியை சந்திக்க இருப்பது புது நம்பிக்கையை கொடுப்பதாக பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட ஷூபம் திவேதியின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஏப்.,22ம் தேதி நடந்த கோர சம்பவமான பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலின் போது, திருமணமாகி இரு மாதங்களே ஆன அசன்யா திவேதியின் கண்முன்னே, அவரது கணவன் ஷூபம் திவேதி சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது சடலத்தின் அருகே அசன்யா அமர்ந்து இருந்த போட்டோ நெஞ்சை ரணமாக்கியது.
இதனிடையே, பிரதமர் மோடி வரும் 30ம் தேதி கான்பூருக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தின் போது, ஷுபம் திவேதியின் குடும்பத்தினரை பிரதமர் சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து ஷூபம் திவேதியின் குடும்பத்தினர் கூறியதாவது; கான்பூர் வரும் பிரதமர் மோடியை சந்திக்க வேண்டும் என்று எம்.பி., ரமேஷ் அவஸ்தியிடம் கோரிக்கை விடுத்தோம். அவரும் இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். இந்த சூழலில் எங்களை சந்திக்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த செய்தி எங்களுக்கு நம்பிக்கையை கொடுக்கிறது. ஷூபமின் மரணத்தை தியாகச்செயலாக அறிவிக்க விரும்புகிறோம். நாட்டுக்காக செய்யப்படும் தியாகங்களுக்கு மிகவும் மதிப்பு கொடுக்கும் பிரதமர் மோடி எங்களின் கோரிக்கையை ஏற்பார் என்று நம்புகிறோம், இவ்வாறு அவர் கூறினார்.