குடிநீர் பிரச்னையை மோடி தலையிட்டு தீர்க்க வேண்டும்: ஆம்ஆத்மி வலியுறுத்தல்
குடிநீர் பிரச்னையை மோடி தலையிட்டு தீர்க்க வேண்டும்: ஆம்ஆத்மி வலியுறுத்தல்
குடிநீர் பிரச்னையை மோடி தலையிட்டு தீர்க்க வேண்டும்: ஆம்ஆத்மி வலியுறுத்தல்
ADDED : ஜூன் 19, 2024 01:25 PM

புதுடில்லி: டில்லியில் நிலவி வரும் குடிநீர் பிரச்னையை பிரதமர் மோடி தலையிட்டு தீர்க்க வேண்டும் என ஆம்ஆத்மி அமைச்சர் அதிஷி வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து, நிருபர்கள் சந்திப்பில் அதிஷி கூறியதாவது: டில்லியில் 28 லட்சம் பேர் குடிநீர் இன்றி, தவித்து வருகின்றனர். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளேன். பிரச்னையை பிரதமர் மோடி தலையிட்டு தீர்க்க வேண்டும். ஜூன் 21ம் தேதிக்குள் தங்களுக்கு உரிய குடிநீரை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்
போராட்டம்
இரண்டு நாட்களுக்குள் பிரச்னையை சரி செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், ஜூன் 21ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம். ஹரியானா அரசு தங்களது பங்கு குடிநீரை திறந்து விடவில்லை. மக்கள் வெயிலின் தாக்கம் மட்டுமின்றி குடிநீர் பற்றாக்குறையையும் எதிர்கொள்கின்றனர்.
தண்ணீர் பிரச்னையை தீர்க்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளேன். தண்ணீர் திறக்க கோரி, ஹரியானா அரசுக்கு பல கடிதங்கள் எழுதியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.