மாருதி கார்களுக்கான மாதாந்திர தவணை இனி ரூ.1,999 மட்டுமே!
மாருதி கார்களுக்கான மாதாந்திர தவணை இனி ரூ.1,999 மட்டுமே!
மாருதி கார்களுக்கான மாதாந்திர தவணை இனி ரூ.1,999 மட்டுமே!

ஆர்வம்
திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி., கடந்த 22 முதல் நாடு முழுதும் அமலுக்கு வந்தது. இதனால், அத்தி யாவசிய பொருட்கள் முதல் இருசக்கர வாகனங்கள், கார்கள் வரை விலை குறைந்துள்ளன. இதனால், அவற்றை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
வரவேற்பு
கடனளிக்கும் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் கடன்களுக்கு உடனுக்குடன் ஒப்புதல் அளிக்கின்றன. கடந்த சில நாட்களாக, நாங்கள் 'பிஸி'யாக உள்ளோம். இதற்கு ஜி.எஸ்.டி., சீர்திருத்தம் தான் காரணம். முன்பு, ஒரு நாளைக்கு 10,000 ஆக இருந்த முன்பதிவு, தற்போது, 18,000 என்ற அளவில் அதிகரித்து உள்ளது. சிறிய கார்களுக்கு கூட நல்ல வரவேற்பு உள்ளது. ஒட்டுமொத்தத்தில் முன்பதிவு இரு மடங்கு அதிகரித்துள்ளது. சிறிய கார்களில், 100 சதவீத விற்பனை வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
எளிதாகிவிடும்
இதன்படி, வாடிக்கையாளர்கள் மாதத்திற்கு, 1,999 ரூபாய் தவணை செலுத்தி காரை சொந்தமாக்கி கொள்ளலாம். இதன் மூலம், இருசக்கர வாகன உரிமையாளர்கள், நான்கு சக்கர வாகனங்களை வாங்குவது இனி எளிதாகி விடும்.இவ்வாறு அவர் பேசினார்.


