Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/நவி மும்பையில் புதிய விமான நிலையம்: திறந்து வைத்தார் பிரதமர் மோடி

நவி மும்பையில் புதிய விமான நிலையம்: திறந்து வைத்தார் பிரதமர் மோடி

நவி மும்பையில் புதிய விமான நிலையம்: திறந்து வைத்தார் பிரதமர் மோடி

நவி மும்பையில் புதிய விமான நிலையம்: திறந்து வைத்தார் பிரதமர் மோடி

ADDED : அக் 08, 2025 04:52 PM


Google News
Latest Tamil News
நவிமும்பை: ரூ.19,650 கோடி செலவில் கட்டப்பட்ட நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

மஹாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் 1,160 ஹெக்டேர் பரப்பளவில், ரூ.19,650 கோடி செலவில் புதிய சர்வதேச விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. இது நாட்டின் விமான போக்குவரத்து திறனை மேலும் அதிகரிக்கும்.

இதன் மூலம் மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தின் கடுமையான போக்குவரத்து சுமை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி இன்று விமான நிலையத்தை திறந்து வைத்து, புதிதாக கட்டப்பட்ட இடத்தில் நடந்துசென்று பார்வையிட்டார்.

புதிய விமான நிலையத்திலிருந்து உள்நாட்டு விமான போக்குவரத்து விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் மாதத்திற்குள் சர்வதேச வழித்தடங்கள் தொடங்க திட்டமிடப்படுள்ளது. தற்போது இங்கு நான்கு முனையங்கள், இரண்டு ஓடுபாதைகள் உள்ளன. மேலும் ஒரு பிரத்யேக விவிஐபி முனையமும் திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த கட்டுமானம் 2026 தொடங்கி 2030 ல் நிறைவடையும்.

லண்டனை தலைமையகமாக கொண்ட ஜஹா ஹதீத் கட்டிடக் கலைஞர்களால் இந்த முனையம் கட்டப்பட்டுள்ளது. இந்த விமான நிலையம் 47 மெகாவாட் சூரிய சக்தியை உருவாக்கும். மின்சார பஸ் சேவைகளையும் இயக்கும். இது வாட்டர் டாக்ஸி சேவை மூலம் இணைக்கப்பட்ட இந்தியாவின் முதல் விமான நிலையமாக மாற உள்ளது.

புதிய விமான நிலையத்தை திறந்துவைத்து பிரதமர் மோடி பேசுகையில், ''இந்த விமான நிலையம் ஆசியாவின் மிகப்பெரிய இணைப்பு மையமாக இருக்கும். இன்று, மும்பை முழுவதும் எளிதாகப் பயணிக்க வசதியாக நகரம் முழுவதும் நிலத்தடி மெட்ரோவையும் கொண்டுள்ளது. மும்பை போன்ற ஒரு நகரத்தில் இவ்வளவு கவனமாக கட்டுமானத்துடன் நிலத்தடி மெட்ரோவைத் தொடங்குவது ஒரு பெரிய சாதனை,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us