Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/பிரதமர் இல்லம் 'சேவா தீர்த்'; புனிதமான சேவை தலம் என பெயர் சூட்டியது மத்திய அரசு

பிரதமர் இல்லம் 'சேவா தீர்த்'; புனிதமான சேவை தலம் என பெயர் சூட்டியது மத்திய அரசு

பிரதமர் இல்லம் 'சேவா தீர்த்'; புனிதமான சேவை தலம் என பெயர் சூட்டியது மத்திய அரசு

பிரதமர் இல்லம் 'சேவா தீர்த்'; புனிதமான சேவை தலம் என பெயர் சூட்டியது மத்திய அரசு

UPDATED : டிச 02, 2025 05:55 PMADDED : டிச 02, 2025 05:48 PM


Google News
Latest Tamil News
புதுடில்லி: டில்லியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பிரதமர் இல்லத்துக்கு ' சேவா தீர்த்' (புனிதமான சேவை தலம்) என பெயர் சூட்டப்பட்டு உள்ளது.

டில்லியில் உள்ள பார்லிமென்ட் கட்டடம், துணை ஜனாதிபதி இல்லம், மத்திய அரசு அலுவலகங்கள், ஜனாதிபதி மாளிகையில் இருந்து இந்தியா கேட் வரையிலான கடமைப் பாதை ஆகியவற்றை முற்றிலுமாக மறுசீரமைக்கப்பட்டு வருகிறது. 'சென்ட்ரல் விஸ்டா' என பெயரிடப்பட்ட இத்திட்டத்துக்கு 20,000 கோடி ரூபாய் நிதியை மத்திய அருசு ஒதுக்கியது. மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை சார்பில் புதிய பார்லிமென்ட் கட்டப்பட்டு, கூட்டத்தொடர்களும் நடந்து வருகின்றன. துணை ஜனாதிபதி இல்லம் கட்டப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும், பிரதமருக்கும் புது இல்லம் கட்டப்பட்டு வருகிறது. இப்பணி முடிவடையும் நிலையில் உள்ளது.

இதனிடையே, இந்த இல்லத்துக்கு சேவா தீர்த் ( புனிதமான சேவை தலம்) என பெயரிடப்பட்டுள்ளது.



இது தொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது: புதிய பிரதமர் இல்லம் என்பது சேவை மனப்பான்மையை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு பணியிடமாகவும், தேசிய முன்னுரிமைகள் வடிவம் பெறும் இடமாகவும் இருக்கும். இந்தியாவின் பொது நிறுவனங்கள் ஆழமான மாற்றத்துக்கு உட்பட்டுள்ளன. ஆட்சி என்ற கருத்து, அதிகாரத்தில் இருந்து பொறுப்பை நோக்கி என மாறுகிறது. இந்த மாற்றம் என்பது நிர்வாக ரீதியாக மட்டுமல்ல கலாசார ரீதியாக மட்டுமே இருக்கும்.

பிரதமர் மோடியின் கீழ், நிர்வாகம் என்பது கடமை மற்றும் வெளிப்படைத்தன்மையை பிரதிபலிக்கும் வகையில் மறுவடிவம் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு பெயரும், ஒவ்வொரு கட்டடமும் ஒவ்வொரு சின்னமும் இப்போது ஒரு எளிய யோசனையை சுட்டிக்காட்டுகின்றன. அரசு என்பது சேவை செய்வதற்கே உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தற்போதுள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு லோக் கல்யாண் மார்க் என்ற பெயர் 2016ம் ஆண்டு சூட்டப்பட்டது. இந்த பெயர், மக்கள் நலனையும், தேர்வு செய்யப்பட்ட அரசின் முன் இருக்கும் பணிகளை நினைவூட்டும் வகையில் தேர்வு செய்யப்பட்டு இருந்தது.


இது குறித்து அதிகாரிகள் மேலும் கூறுகையில், இந்த மாற்றங்கள் ஒரு ஆழமான சித்தாந்த மாற்றத்தை குறிக்கிறது. இந்திய ஜனநாயகம் அதிகாரத்துக்கு பதில் பொறுப்பையும், அந்தஸ்தை விட சேவையையும் தேர்வு செய்கிறது. பெயர்களில் மாற்றம் என்பது மனநிலையிலும் ஏற்படும் மாற்றமாகும். இன்று அவர்கள் சேவை , கடமை மற்றும் குடிமக்களுக்கு முன்னுரிமை என்பதைப் பற்றி பேசுகிறார்கள் எனவும் தெரிவித்தனர்.

சில நாட்களுக்கு முன்னர் கவர்னர் மாளிகைக்கு இருந்த 'ராஜ்பவன் 'என்ற பெயராவது ' லோக் பவன்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதற்கு முன்பு சில ஆண்டுகளுக்கு முன்பு, ஜனாதிபதி மாளிகை முதல் இந்தியா கேட் வரையிலான ' ராஜபாதை' என்ற பெயர், 'கர்தவயா பாதை (கடமை பாதை)' என பெயர் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us