Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/அடுத்த பா.ஜ., தலைவர்: பிரதமர் ஆலோசனை

அடுத்த பா.ஜ., தலைவர்: பிரதமர் ஆலோசனை

அடுத்த பா.ஜ., தலைவர்: பிரதமர் ஆலோசனை

அடுத்த பா.ஜ., தலைவர்: பிரதமர் ஆலோசனை

Latest Tamil News
பா.ஜ., தேசிய தலைவராக, 2020 ஜனவரியில் நட்டா நியமிக்கப்பட்டார். அக்கட்சியின் விதிகளின்படி, தேசிய தலைவரின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள். கடந்த 2023ல் நட்டாவின் பதவிக்காலம் முடிந்த நிலையில், 2024 லோக்சபா தேர்தலையொட்டி நீட்டிக்கப்பட்டது. தற்போது வரை, பா.ஜ.,வுக்கு புதிய தேசிய தலைவர் நியமிக்கப்படவில்லை.

இந்நிலையில் நேற்று, பார்லி.,யில் உள்ள தன் அறையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ., தேசிய தலைவரும், மத்திய சுகாதார அமைச்சருமான நட்டா, அக்கட்சியின் தேசிய பொதுச்செயலர் பி.எல்.சந்தோஷ் ஆகியோருடன், பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது கட்சியின் புதிய தலைவர் முதல் மத்திய அமைச்சரவை மாற்றம் வரை விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கட்சி தலைவருக்கான போட்டியில், மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், சிவ்ராஜ் சிங் சவுகான் உள்ளிட்டோர் முன்னணியில் இருக்கின்றனர் . அதே சமயம், இளைஞர் ஒருவரை தலைவராக நியமிக்க, பா.ஜ., மேலிடம் விரும்புவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

- நமது சிறப்பு நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us