Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/பத்மஸ்ரீ விருது பெற்ற விஞ்ஞானி காவிரி ஆற்றில் சடலமாக கண்டெடுப்பு!

பத்மஸ்ரீ விருது பெற்ற விஞ்ஞானி காவிரி ஆற்றில் சடலமாக கண்டெடுப்பு!

பத்மஸ்ரீ விருது பெற்ற விஞ்ஞானி காவிரி ஆற்றில் சடலமாக கண்டெடுப்பு!

பத்மஸ்ரீ விருது பெற்ற விஞ்ஞானி காவிரி ஆற்றில் சடலமாக கண்டெடுப்பு!

Latest Tamil News
மாண்டியா: பத்மஸ்ரீ விருது பெற்ற விஞ்ஞானி காவிரி ஆற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றிய விவரம் வருமாறு;

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் சுப்பண்ணா அய்யப்பன்(70). வேளாண் விஞ்ஞானியான இவருக்கு 2022ம் பத்மஸ்ரீ விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்தது.

மைசூரு விஸ்வேவரய்யா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

மே 7ம் தேதி முதல் சுப்பண்ணா அய்யப்பன் காணாமல் போய்விட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந் நிலையில் மாண்டியாவில் உள்ள காவிரி ஆற்றில் அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். சுப்பண்ணா அய்யப்பன் சடலத்தை போலீசார் மீட்டு விசாரணையில் இறங்கி உள்ளனர்.

முதல்கட்ட விசாரணையில் சுப்பண்ணா அய்யப்பன் தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது. ஆனால் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us