பீஹாரில் கடும் மின்தடை; மொபைல்போன் வெளிச்சத்தில் தேர்வெழுதிய மாணவர்கள்
பீஹாரில் கடும் மின்தடை; மொபைல்போன் வெளிச்சத்தில் தேர்வெழுதிய மாணவர்கள்
பீஹாரில் கடும் மின்தடை; மொபைல்போன் வெளிச்சத்தில் தேர்வெழுதிய மாணவர்கள்
ADDED : மே 23, 2025 07:02 PM

பாட்னா: பீஹாரில் முன்னறிவிப்பின்றி மின்சாரம் தடைபட்டதால், மொபைல்போன் வெளிச்சத்தில் கல்லூரி மாணவர்கள் தேர்வு எழுதினர்.
இதுபற்றிய விவரம் வருமாறு;
பெட்டய்யா பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது மாணவர்கள் தேர்வை மும்முரமாக எழுதிக் கொண்டு இருந்தனர்.
எதிர்பாராத விதமாக திடீரென் மின் விநியோகம் தடைபட்டது. நீண்ட நேரம் ஆகியும் மாற்று ஏற்பாட்டை கல்லூரி நிர்வாகம் செய்யவில்லை. அங்குள்ள ஜெனரேட்டரும் இயங்கவில்லை.
எங்கும் இருள்சூழ்ந்து காணப்பட்டதால், தேர்வுக்கூடத்தில் இருந்த மாணவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறினர். அதன் பின்னர், மொபைல் போனில் உள்ள விளக்கு வெளிச்சத்தை பயன்படுத்தி தேர்வு எழுதுமாறு கல்லூரி நிர்வாகம் கட்டாயப்படுத்தியதாக தெரிகிறது.
இதையடுத்து, மாணவர்களும் மொபைல்போனில் இருந்து விளக்கை உயிர்ப்பித்து, அதில் கிடைத்த சொற்ப வெளிச்சத்தில் தேர்வை எழுதி முடித்தனர். இருட்டில் மாணவர்கள் தேர்வு எழுதிய வீடியோ எப்படியோ கசிந்து சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது.
இந்த வீடியோவை பார்த்த எம்.எல்.ஏ., ரஷ்மி வர்மா கல்லூரி நிர்வாகத்தை கடுமையாக கண்டித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த கல்லூரி எனது மூதாதையர்கள் உருவாக்கியது. இன்று இருட்டில் உள்ளது. மின்சாரத்தை விநியோகிப்பதில் ஏற்பட்ட தோல்வியல்ல, ஒட்டு மொத்த கல்லூரி நிர்வாகமும் தோல்வி அடைந்து இருக்கிறது என்றார்.