முன்ஜாமின் மனு தள்ளுபடி : பூஜா கேத்கர் வெளிநாடு தப்பி ஓட்டமா ?
முன்ஜாமின் மனு தள்ளுபடி : பூஜா கேத்கர் வெளிநாடு தப்பி ஓட்டமா ?
முன்ஜாமின் மனு தள்ளுபடி : பூஜா கேத்கர் வெளிநாடு தப்பி ஓட்டமா ?
UPDATED : ஆக 02, 2024 11:33 PM
ADDED : ஆக 02, 2024 11:24 PM

புதுடில்லி : சர்ச்சை பயிற்சி ஐ.ஏ.எஸ்., அதிகாரி பூஜா கேத்கர் மீதான மோசடி வழக்கில் முன்ஜாமின் மனு தள்ளுபடியானதையடுத்து துபாய் தப்பியேடிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மஹாராஷ்டிராவைச் சேர்ந்த பூஜா கேத்கர், 34, புனே உதவி கலெக்டராக பயிற்சி ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக இருந்த போது இவர், மீது அடுக்கடுக்கான புகார்கள் வெளிவரத் துவங்கின.
இதில் ஐ.ஏ.எஸ்., பணியில் சேர்ந்தபோது, உடல் ரீதியான குறைபாடு மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கான சான்றிதழ்களை, முறைகேடாக சமர்ப்பித்தது ஆகிய புகார்களின் மீது டில்லி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவரது தேர்ச்சியை ரத்து செய்த யு.பி.எஸ்.சி., எதிர்காலத்தில் தேர்வில் பங்கேற்க, அவருக்கு நிரந்தர தடை விதித்தும் உத்தரவிட்டது.
இந்த வழக்கில் குற்றம் நிரூபணம் ஆனால் கைது செய்யப்படுவதை தடுக்க டில்லி கீழ் கோர்டில் முன் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த கூடுதல் செஷன்ஸ் நீதிபதி தேவேந்திர குமார் ஜங்காலா, முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தார்.
இதையடுத்து பூஜா கேத்கர் துபாய் தப்பியோடிவிட்டதாக கூறப்படுகிறது. அவரை போலீசார் தேடிவருவதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.