தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/பி.எஸ்.எல்.வி.சி-60 ராக்கெட் விண்ணில் ஏவ தயார்; இஸ்ரோ அப்டேட்

பி.எஸ்.எல்.வி.சி-60 ராக்கெட் விண்ணில் ஏவ தயார்; இஸ்ரோ அப்டேட்

பி.எஸ்.எல்.வி.சி-60 ராக்கெட் விண்ணில் ஏவ தயார்; இஸ்ரோ அப்டேட்


ADDED : டிச 26, 2024 02:34 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 26, 2024 02:34 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஸ்ரீஹரிகோட்டா: பி.எஸ்.எல்.வி.சி-60 ராக்கெட் வரும் டிசம்பர் 30ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளன. அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு தயார் நிலையில் இஸ்ரோ உள்ளது.

இரண்டு சிறிய விண்கலன்களை ஏவும் 'ஸ்பேடெக்ஸ்' திட்டத்துக்காக, பி.எஸ்.எல்.வி., சி 60 ராக்கெட், ஸ்ரீஹரிக்கோட்டா ஏவுதளத்தில் இருந்து ஏவ, இஸ்ரோ அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. பி.எஸ்.எல்.வி.சி-60 ராக்கெட் வரும் டிசம்பர் 30ம் தேதி விண்ணில் ஏவ இஸ்ரோ முடிவு செய்துள்ளது. எஸ்.டி.எக்ஸ்.1, எஸ்.டி.எக்ஸ்.2 என தலா 220 கிலோ எடை கொண்ட 2 சிறிய செயற்கைக்கோள்களைச் சுமந்து செல்கிறது.

ஒவ்வொன்றும் தலா 220 கிலோ எடை கொண்ட 2 சிறிய செயற்கைக்கோள்கள் பூமியில் இருந்து 470 கிலோ மீட்டர் உயரத்தில் உள்ள வெவ்வேறு சுற்றுப்பாதையில் நிலை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கென ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் நேர் நிறுத்தப்பட்டுள்ள ராக்கெட்டின் உட்பகுதியில் இரு செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us