பஞ்சாப் 'சிங்கம்' ஷ்ரேயஸ் விளாசல்; வீழ்ந்தது குஜராத் அணி
பஞ்சாப் 'சிங்கம்' ஷ்ரேயஸ் விளாசல்; வீழ்ந்தது குஜராத் அணி
பஞ்சாப் 'சிங்கம்' ஷ்ரேயஸ் விளாசல்; வீழ்ந்தது குஜராத் அணி

அசத்தல் அறிமுகம்
பஞ்சாப் அணிக்கு அறிமுக வீரர் பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் (5) ஜோடி துவக்கம் கொடுத்தது. அடுத்து வந்த கேப்டன் ஷ்ரேயஸ், பவுண்டரி அடித்து ரன் கணக்கைத் துவக்கினார். போட்டியின் 5வது ஓவரை வீசினார் அர்ஷத். இதில் ஆவேசம் காட்டிய ஆர்யா, 4, 4, 6, 4 என அடிக்க, 21 ரன் எடுக்கப்பட்டன. ஆர்யாவை (47 ரன், 23 பந்து) வெளியேற்றினார் ரஷித் கான்.
சாய் கிஷோர் 'மூன்று'
பஞ்சாப் அணி 10.2 ஓவரில் 105/2 ரன் என வலுவாக இருந்தது. 11வது ஓவரை வீசிய சாய் கிஷோர், 3 வது பந்தில் ஓமர்சாய் (16), 4வது பந்தில் அபாயகரமான மேக்ஸ்வெல் (0) என இருவரையும் திருப்பி அனுப்ப, சற்று திணறியது. அடுத்து, சாய் கிஷோரின் 13வது ஓவரில் ஷ்ரேயஸ் இரண்டு சிக்சர், ஸ்டாய்னிஸ் ஒரு பவுண்டரி அடிக்க, மீண்டும் ரன் 'வேகம்' எடுத்தது.
ஷ்ரேயஸ் அரைசதம்
ரஷித்கான் ஓவரில் அடுத்தடுத்த சிக்சர் அடித்த ஷ்ரேயஸ், 27 வது பந்தில் அரைசதம் அடித்தார். மீண்டும் வந்த சாய் கிஷோர், இம்முறை ஸ்டாய்னிசை (20) வெளியேற்றினார். 17 வது ஓவரை பிரசித் கிருஷ்ணா வீசினார். இதில் ரன் மழை பொழிந்த ஷ்ரேயஸ், 24 ரன் (6, 4, 6, 6, 2) குவித்தார். மறுபக்கம் ரஷித் கான் ஓவரில் ஷஷாங்க் சிங், 6, 4, 2, 6 என மிரட்ட, பஞ்சாப் அணியின் ஸ்கோர் 18 ஓவரில் 210/5 ரன் ஆனது. பஞ்சாப் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 243 ரன் குவித்தது. ஷ்ரேயஸ் (97), ஷஷாங்க் (44 ரன், 16 பந்து) அவுட்டாகாமல் இருந்தனர்.
சுதர்சன் நம்பிக்கை
கடின இலக்கைத் துரத்திய குஜராத் அணிக்கு சாய் சுதர்சன், சுப்மன் கில் ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. 5.5 ஓவரில் 61 ரன் சேர்த்த போது, சுப்மன் (33 ரன், 14 பந்து) அவுட்டானார். அடுத்து இணைந்த சாய் சுதர்சன், பட்லர் ஜோடி மின்னல் வேக ரன் குவிப்பை வெளிப்படுத்தியது. சாய் சுதர்சன் அரைசதம் எட்டினார்.