5 ஆண்டுகளில் ரூ.400 கோடி வரி செலுத்திய ராம ஜென்மபூமி அறக்கட்டளை
5 ஆண்டுகளில் ரூ.400 கோடி வரி செலுத்திய ராம ஜென்மபூமி அறக்கட்டளை
5 ஆண்டுகளில் ரூ.400 கோடி வரி செலுத்திய ராம ஜென்மபூமி அறக்கட்டளை
ADDED : மார் 17, 2025 10:28 AM

அயோத்தி: கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் அரசுக்கு ரூ.400 கோடி வரி செலுத்தி உள்ளதாக ராம ஜென்மபூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
இது குறித்து ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்தச் சேத்திர அறக்கட்டளையின் செயலாளர் சம்பத் ராய் கூறியதாவது; இந்தியாவில் உள்ள முக்கிய ஆன்மிகத் தலமாக அயோத்தி ராமர் கோவில் உருவாகியுள்ளது. நாளுக்கு நாள் இந்தக் கோவிலில் தரிசனம் செய்யும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. மஹா கும்பமேளாவின் போது மட்டும் 1.26 கோடி பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
கடந்த ஆண்டில் மட்டும் 16 கோடி பேர் அயோத்திக்கு வந்துள்ளனர். அவர்களில் 5 கோடி பேர் ராமர் கோவிலுக்கு வருகை புரிந்துள்ளனர்.
கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ராம ஜென்மபூமி அறக்கட்டளை சார்பில் ரூ.400 கோடி அரசுக்கு வரியாக செலுத்தப்பட்டுள்ளது. அறக்கட்டளையின் வரவு செலவு கணக்குகள்,சி.ஏ.ஜி., அதிகாரிகளால் தொடர்ந்து தணிக்கை செய்யப்பட்டு வருகிறது, இவ்வாறு அவர் கூறினார்.