Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/கேரளாவில் வேகம் பெறும் மூளையைத் தின்னும் அமீபா தொற்று; இதுவரை 23 பேர் பலி

கேரளாவில் வேகம் பெறும் மூளையைத் தின்னும் அமீபா தொற்று; இதுவரை 23 பேர் பலி

கேரளாவில் வேகம் பெறும் மூளையைத் தின்னும் அமீபா தொற்று; இதுவரை 23 பேர் பலி

கேரளாவில் வேகம் பெறும் மூளையைத் தின்னும் அமீபா தொற்று; இதுவரை 23 பேர் பலி

Latest Tamil News
திருவனந்தபுரம்; கேரளாவில், மூளையைத் தின்னும் அமீபா தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.

கேரளாவில் மூளையைத் தின்னும் அமீபா தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது ஒரு வகையான மூளைக்காய்ச்சலாகும். 104 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதுள்ள நிலவரப்படி 23 பேர் பலியாகி உள்ளதாக அம்மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தமது முகநூல் பக்கத்தில் வெளியிட்டு உள்ளதாவது;

இன்றுடன் சேர்த்து மொத்தம் 104 அமீபிக் தொற்றுகள் பதிவாகி இருக்கின்றன. பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 23 பேர் பலியாகி உள்ளனர். இந்த நோய் தொற்றுக்கு எதிராக அரசு தீவிரமாக போராடி வருகிறது.

கொல்லம், திருவனந்தபுரம் மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளன. கோழிக்கோடு, மலப்புரத்திலும் தொற்றுகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. 2023ம் ஆண்டில் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பரவியதை அடுத்து, மூளைக்காய்ச்சல் தொடர்பான நோய் தொற்றுகளை கட்டாயமாக தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறோம்.

அதன் பயனாக, மூளைக்காய்ச்சல் பற்றிய தொற்றுகளின் எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக பெறப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி மொத்தம் 104 பேருக்கு இந்த தொற்று உள்ளது. அவர்களில் 23பேர் பலியாகி இருக்கின்றனர்.

இவ்வாறு அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us