Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ இறந்து கிடந்த முதியவர் பையில் ரூ.91,000 பணம்

இறந்து கிடந்த முதியவர் பையில் ரூ.91,000 பணம்

இறந்து கிடந்த முதியவர் பையில் ரூ.91,000 பணம்

இறந்து கிடந்த முதியவர் பையில் ரூ.91,000 பணம்

ADDED : ஜூன் 17, 2025 08:33 PM


Google News
மதுரா:உத்தர பிரதேசத்தில், இறந்து கிடந்த முதியவர் உடைமைகளில், 91,000 ரூபாய் பணம் மற்றும் நாணயங்கள் இருந்தன. அவர் யார் என விசாரணை நடக்கிறது.

உ.பி., மாநிலம் மதுரா ரயில் நிலைய, எட்டாவது நடைமேடையில் நேற்று முன் தினம் ஒரு முதியவர் இறந்து கிடந்தார். தகவல் அறிந்து, ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் யத்ராம் சிங் தலைமையில் போலீசார் வந்து சோதனை நடத்தினர். முதியவர் வைத்திருந்த மூட்டைக்குள் இருந்த பாலித்தீன் பையில், 91,070 ரூபாய் பணம் மற்றும் சில்லறை நாணயங்கள் இருந்தன. மேலும், பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து பணம் எடுத்ததற்கான ரசீதும் இருந்தது. சிம் கார்டு இல்லாத ஒரு மொபைல் போனும் இருந்தது.

ரயில் நிலைய கேன்டீன் ஊழியர்கள், 'அந்த முதியவர் சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார்' என கூறினர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த ரயில்வே போலீசார் அவர் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர். முதியவர் போட்டோ மாநிலத்தின் அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

காணாமல் போன மற்றும் அடையாளம் தெரியாத நபர்களைக் கண்காணிக்கும் இணையதளத்திலும் அவரது படம் பதிவேற்றப்பட்டுள்ளது. மேலும், பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையில் அவரது கணக்கு விபரங்களை வைத்து, அவரது முகவரியை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். முதியவர் உடல், மதுரா அரசு மருத்துவமனை பிணவறையில் பாதுகாக்கப்படுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us