Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ தியாகம், சேவை, ஒழுக்க உணர்வுகளே ஆர்.எஸ்.எஸ்.,சின் உண்மையான பலம் ரேடியோ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்

தியாகம், சேவை, ஒழுக்க உணர்வுகளே ஆர்.எஸ்.எஸ்.,சின் உண்மையான பலம் ரேடியோ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்

தியாகம், சேவை, ஒழுக்க உணர்வுகளே ஆர்.எஸ்.எஸ்.,சின் உண்மையான பலம் ரேடியோ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்

தியாகம், சேவை, ஒழுக்க உணர்வுகளே ஆர்.எஸ்.எஸ்.,சின் உண்மையான பலம் ரேடியோ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்

ADDED : செப் 29, 2025 06:05 AM


Google News
Latest Tamil News
புதுடில்லி: ''தியாகம், தன்னலமற்ற சேவை மற்றும் ஒழுக்கத்தை கற்பிக்கும் உணர்வே ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் உண்மையான பலம். அந்த அமைப்பின் நிர்வாகிகளின் ஒவ்வொரு செயலிலும், 'தேசமே முதலில்' என்ற உணர்வு மேலோங்கி இருக்கிறது,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

பிரதமராக பதவியேற்ற 2014 முதல், ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில், 'மன் கீ பாத்' எனப்படும், 'மனதின் குரல்' என்ற ரேடியோ நிகழ்ச்சி மூலம், நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.

முன்னுரிமை அந்த வகையில் நேற்று, மனதின் குரல் நிகழ்ச்சியின், 126வது அத்தியாயத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

இந்த விஜயதசமி மிகவும் சிறப்பு வாய்ந்தது. அன்றைய தினம், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் நுாற்றாண்டு விழாவை குறிக்கிறது. இந்த நுாற்றாண்டு பயணம் அற்புதமானது, முன்னோடியில்லாதது மற்றும் ஊக்கமளிக்கிறது.

தியாகம், தன்னலமற்ற சேவை, ஒழுக்கத்தின் போதனைகளே ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் உண்மையான பலம். அந்த அமைப்பு நுாற்றாண்டுகளாக நம் நாட்டுக்கு சேவை செய்து வருகிறது.

நாட்டில் எங்காவது இயற்கை பேரிடர் ஏற்பட்டால், முதல் ஆளாக, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் நிர்வாகிகள் தான் அங்கு செல்வர். 'தேசமே முதலில்' என்ற உணர்வு, அவர்களின் செயல்களில் எப்போதும் மேலோங்கி இருக்கிறது.

இந்த பண்டிகை காலத்தில், உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பொருட்களையே நாட்டு மக்கள் வாங்க வேண்டும். 'சுதேசி' பொருட்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். உள்ளூர் பொருட்களை வாங்குவது, ஒரு குடும்பத்திற்கு நம்பிக்கையைத் தரும்; கைவினை கலைஞரின் கடின உழைப்பை மதிக்கும்.

வரும் 2ம் தேதி மஹாத்மா காந்தி பிறந்த நாளன்று, காதி நிறுவனத்தின் ஒரு பொருளையாவது வாங்க வேண்டும். காதியை போலவே, நம் கைத்தறி மற்றும் கைவினைத் துறையும் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கண்டு வருகிறது.

தமிழகத்தைச் சேர்ந்த அசோக் ஜெகதீசன், பிரேம் செல்வராஜ் ஆகியோர் தங்கள் நிறுவன வேலைகளை விட்டு விட்டு, ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டனர்.

அவர்கள் புல் மற்றும் வாழை நார்களிலிருந்து யோகா பாய்களை உருவாக்கினர். மூலிகை சாயங்களால் ஆடைகளுக்கு சாயம் பூசினர். மேலும், 200 குடும்பங்களுக்கு பயிற்சி அளித்து வேலைவாய்ப்பை வழங் கியுள்ளனர்.

நடவடிக்கை மேற்கு வங்கத்தில் வெகு விமரிசையாக கொண் டாடப்படும் துர்கா பூஜை பண்டிகை, 'யுனெஸ்கோ'வின் கலாசார பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டது போல, 'சாத்' விழாவையும் சேர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

உல கின் மிகவும் தொலைதுாரமான மற்றும் அணுக முடியாத இடமாகக் கருதப்படும், 'பாயின்ட் நீமோ'வை வெற்றிகரமாகக் கடந்து சென்றதற்காக, நம் கடற்படை அதிகாரிகளான லெப்டினன்ட் கமாண்டர் தில்னா, லெப்டினன்ட் கமாண்டர் ரூபா ஆகியோருக்கு வாழ்த்துகள்.

இவ்வாறு அவர் பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us