Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/பள்ளி, கல்லுாரிகள் அருகே பான்மசாலா விற்பனை; அ.தி.மு.க., புகாரால் ராஜ்யசபாவில் சலசலப்பு

பள்ளி, கல்லுாரிகள் அருகே பான்மசாலா விற்பனை; அ.தி.மு.க., புகாரால் ராஜ்யசபாவில் சலசலப்பு

பள்ளி, கல்லுாரிகள் அருகே பான்மசாலா விற்பனை; அ.தி.மு.க., புகாரால் ராஜ்யசபாவில் சலசலப்பு

பள்ளி, கல்லுாரிகள் அருகே பான்மசாலா விற்பனை; அ.தி.மு.க., புகாரால் ராஜ்யசபாவில் சலசலப்பு

Latest Tamil News
தமிழகத்தில் கள்ளச்சந்தைகள் மூலம், பள்ளி, கல்லுாரி கள் அருகே சிகரெட், பான் மசாலா, குட்கா, புகையிலை உள்ளிட்ட பொருட்கள் ஏராளமாக விற்பனை செய்யப்படுவதாக, அ.தி.மு.க., - எம்.பி., ராஜ்யசபாவில் குற்றஞ்சாட்டிப் பேசியதால், சல சலப்பு ஏற்பட்டது.

கள்ளச் சந்தை புகை யிலை பொருட்கள் மீது, கலால் வரி மற்றும் பான் மசாலா பொருட்கள் மீது, செஸ் வரி விதிக்க வகை செய்யும் திருத்த மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்று தி.மு.க., - எம்.பி.,கிரிராஜன் பேசியதாவது:

சிகரெட், பான் மசாலா, புகையிலை போன்ற பொருட்களின் விற்பனையை கட்டுப்படுத்துவதுதான் முக்கியம். அரசின் நடவடிக்கை அதுவாகத்தான் இருக்க வேண்டும்.

அதற்கு பதிலாக இந்த பொருட்களின் மீது, கூடுதல் வரியை விதிக்கும் நடவடிக்கை சரியல்ல. இவ்வாறு செய்வதன் வாயிலாக கள்ளச் சந்தைகளை ஊக்குவித்து விடும். கூடுதல் வரி விதிப்பு என்பது, மக்களுக்கு சுமையாகி விடும். இவ்வாறு பேசினார்.

பின் அ.தி.மு.க., - எம்.பி., தம்பிதுரை பேசியதாவது: தமிழகத்தில், திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல், வாணியம்பாடி, ஆம்பூர், கிருஷ்ணகிரி போன்ற இடங்களில் பீடித் தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர்.

விழிப்புணர்வு

அவர்களுக்கு புனரமைப்பு நடவடிக்கைகளை செய்து தருவதோடு, திறன் மேம்பாட்டு நடவடிக்கையையும் ஊக்குவிக்க வேண்டும். பள்ளி , கல்லுாரிகளில், புகையிலை அபாயம் குறித்த விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொள்வது அவசியம், கூடுதல் வரி விதிப்பு, கள்ளச் சந்தைகளை ஊக்குவிக்கும் என தி.மு.க., - எம்.பி., கூறுகிறார்.

தமிழகத்தில், ஏற்கனவே, நிறைய கள்ளச் சந்தைகள் உள்ளன. சிகரெட், பான் மசாலா, குட்கா, புகையிலை பொருட்கள் பள்ளி கல்லுாரி அருகே விற்கக் கூடாது என்ற விதி இருக்கிறது. ஆனாலும், தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லுாரிகள் அருகே, இந்த பொருட்களின் விற்பனை ஏராளமாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

இதற்கு தி.மு.க., தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். இதனால் சபையில் சலசலப்பு ஏற்பட்டது.

- நமது டில்லி நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us