ADDED : மார் 12, 2025 08:12 PM

மத்திய ஊரக வளர்ச்சித் துறை நடத்திய 'சரஸ் அஜீவிகா மேளா 2025' ல், கவுதம் புத்தா நகர் தென்னிந்திய சங்கம் மற்றும் தியாகராஜர் இசை மையம் ஆகியவை இணைந்து கலாசார நிகழ்ச்சி நடத்தின.
வயலின் கலைஞர் அனன்யா பாலாஜி, புல்லாங்குழல் ஸ்கந்தன், மிருதங்கம் ஸ்ரீராம், கர்நாடக இசைப் பாடகர் ரேணுகா மற்றும் மிருதுல் சர்மா, கோரதி நடன கலைஞர் அன்விகா ஆகியோர் கலைநிகழ்ச்சி நடத்தினர். சங்கத்தலைவர் அருணாசலம், பொதுச் செயலர் ராஜேஸ்வரி தியாகராஜன், நிர்வாக உறுப்பினர்கள் முரளி, ஸ்ரீராம் ரவி, இசை மைய இயக்குனர் தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.