ADDED : ஜன 13, 2024 11:17 PM
ஓட்டுக்காக நாடகம்!
அயோத்தி ராமர் கோவிலுக்கு போக மாட்டோம்னு, கை கட்சிக்காரங்க அறிவிச்சாங்க. இத வைச்சு தாமரைகாரங்க அரசியல் பண்ணுறாங்க. சுதாரிச்சிகிட்ட கை கட்சிக்காரங்க, நாங்க ராமர் கோவிலுக்கு போகவே மாட்டோம்னு சொல்லல. திறப்பு விழாவுக்கு போக மாட்டோம்னு சொன்னோம்னு, பிளேட்ட திருப்பிப் போட்டு இருக்காங்க. வர்ற லோக்சபா தேர்தல்ல முஸ்லிம்கள், ஹிந்துக்கள் ஓட்டுகளை பிடிக்க, கைகட்சிக்காரங்க நல்ல நாடகம் போடுறாங்கன்னு, தாமரைகாரங்க கடுப்புல இருக்காங்க. ஆனா கை கட்சிக்காரங்க அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பான்னு, சொல்லிட்டு வர்றாங்களாம்.
முஸ்லிம் ஓட்டுகளுக்கு குறி!
தாமரை முஸ்லிம்களுக்கு எதிரான, கட்சின்னு ஒரு கருத்து சமூகத்துல இருக்கு. இதனால தேர்தல்ல பெரும்பாலும் கை கட்சிய, முஸ்லிம்கள் ஆதரிச்சிட்டு வர்றாங்க. வரும் லோக்சபா தேர்தல்ல, முஸ்லிம்கள் ஓட்டயும் பிடிக்கணும்னு, தாமரை கட்சிக்காரங்க, 'பிளான்' போட்டு இருக்காங்க. இந்த நிலையில ஹாவேரியில முஸ்லிம் பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டது, தாமரை கட்சிக்காரங்களுக்கு பிளஸ் பாயின்டா மாறி இருக்கு. அந்த பெண் வீட்டுக்கு போய், ஆறுதல் சொல்ல போறாங்களாம். இதன்மூலம் தாமரை கட்சி, முஸ்லிம்களுக்கு ஆதரவா இருக்குன்னு, சொல்லாம, சொல்ல போறாங்களாம்.
தொண்டர்களுக்கு உத்தரவு!
லோக்சபா தேர்தலுக்காக தாமரை, புல்லுக்கட்டு கட்சிகள் கூட்டணி வைச்சு இருக்காங்க. உருளை மாவட்ட தலைநகர் தொகுதியில, தொட்டகவுடர் பேரன் போட்டியிட, தாமரை கட்சிக்காரங்க தொடர்ந்து எதிர்ப்ப தெரிவிச்சிட்டு வர்றாங்க. ஆனா தொட்டகவுடர் எதுக்கும் அசராம இருக்காரு. அந்த தொகுதி சீட் பேரனுக்கு தான், ரொம்ப உறுதியாக இருக்காறாம். யார் என்ன சொன்னாலும், கவலைப்படாதீங்க. உருளை மாவட்ட தொகுதி நமக்கு தான், தொண்டர்கள் கிட்ட சொல்லி இருக்காரு. பேரன் வெற்றிக்காக வேலை பாருங்கன்னு, தொண்டர்களுக்கு உத்தரவு போட்டு இருக்காறாம்.


