Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/சீக்ரெட் சிங்காரம்

சீக்ரெட் சிங்காரம்

சீக்ரெட் சிங்காரம்

சீக்ரெட் சிங்காரம்

ADDED : ஜன 18, 2024 05:08 AM


Google News
கதி கலங்கி நிற்கும் முனி!

தங்க சுரங்க மாவட்ட தலைநகர் தொகுதியில இருந்து, ஏழு முறை எம்.பி., ஆனவரு முனி. கடந்த தேர்தல்ல தோல்வி அடைஞ்சாரு. எப்படியோ மேலிடத்துல பேசி, சட்டசபை தேர்தல்ல போட்டியிட்டு, அமைச்சரும் ஆயிட்டாரு. வர்ற லோக்சபா தேர்தல்ல போட்டியிட, முனிக்கு ஆசை இருக்காம். கடந்த முறை உட்கட்சி பிரச்னையால, கை கட்சி முன்னாள் சபாநாயகர் கோஷ்டி தான், முனிய தோற்கடிச்சாங்க. இந்த முறையும் முனி போட்டியிட்டாட, அவர தோற்கடிக்க ரெடியா இருக்காங்களாம். இதனால முனி கதி கலங்கி நிற்குறாம்.

குமரண்ணரிடம் கெஞ்சல்!

வர்ற லோக்சபா தேர்தல்ல, பெங்களூரு ரூரல் தொகுதியில தாமரை கட்சி சார்புல போட்டியிட, எம்.எல்.சி., ஒருத்தருக்கு ஆசை இருக்கு. ஆனா அந்த தொகுதியில குமரண்ணர் போட்டியிட வாய்ப்பு இருக்குறதா தகவல் இருக்கு. இதனால அந்த எம்.எல்.சி., குமரண்ணர் கூட தொடர்புல இருக்காறாம். எனக்கு அந்த தொகுதிய விட்டுகொடுங்கன்னு கெஞ்சுறாராம். எம்.எல்.சி.,போட்டியிட அவரு கட்சியிலயே எதிர்ப்பு இருக்கு. முன்னாள் துணை முதல்வரு ஒருத்தரு, தன்னோட ஆதரவாளர்களுக்கு 'சீட்' வாங்கித் தர முயற்சி பண்ணுறாராம்.

நடிகரின் ரீ என்ட்ரீ!

புல்லுக்கட்டு கட்சி தலைவரு, குமரண்ணரோட மகன் நிகிலு சினிமா நடிகரு. முதல் கோணல் முற்றிலும் கோணல்னு சொல்லுவாங்க. அதுபோல நிகில் போட்டியிட்ட, இரண்டு தேர்தல்லயும் தோல்வி அடைஞ்சாரு. இதனால சில மாசமா வெளிய தலை காட்டல. லோக்சபா தேர்தல் நெருங்குறதால, இப்போ ரீ என்ட்ரீ கொடுத்து இருக்காரு. ஆளுங்கட்சிக்காரங்க விமர்சனம் செய்யுறாரு. தேர்தல் பிரசாரத்துல அப்பாவுக்கு தோள் கொடுக்கப் போறாராம். இதனால புல்லுக்கட்டு தொண்டர்கள் உற்சாகத்துல இருக்காங்க.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us