எம்.எல்..ஏ.பதவியை ராஜினாமா செய்தார் சிக்கிம் முதல்வர் மனைவி
எம்.எல்..ஏ.பதவியை ராஜினாமா செய்தார் சிக்கிம் முதல்வர் மனைவி
எம்.எல்..ஏ.பதவியை ராஜினாமா செய்தார் சிக்கிம் முதல்வர் மனைவி
ADDED : ஜூன் 13, 2024 10:18 PM

காங்டாங்க்: சிக்கிமில் முதல்வராக பிரேம்சிங் தமாங் நேற்று பதவிறே்ற நிலையில் இக்கட்சி எம்.எல்.ஏ.வும், முதல்வர் மனைவியுமான கிருஷ்ணகுமாரி ராய் தன் பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.
சிக்கிமில் மொத்தமுள்ள 32 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், ஒரு லோக்சபா தொகுதிக்கும் நடந்த தேர்தலில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி (எஸ்கேஎம்) 31 இடங்களில்வெற்றி பெற்றுள்ளது.
சிக்கிம் முதல்வரும், சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சித் தலைவருமான பிரேம் சிங் தமாங் முதல்வராக பதவியேற்றார். இக்கட்சியைச் சேர்ந்தவரும் பிரேம் சிங் தமாங்கின் மனைவியுமான கிருஷ்ண குமாரி ராய் நாம்ச்சி-சிங்கிதாங் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
இந்நிலையில், இன்று (13.06.2024) தனது எம்.எல்.ஏ., பதவியை கிருஷ்ண குமாரி ராய் திடீரென ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜினாமாவுக்கான காரணம் வெளியாகவில்லை. இவரது ராஜினாமாவை புதிதாக தேர்வு செய்யப்பட்ட சட்டசபை சபாநாயகர் மின்ங்மா நூர்பு ஷெர்பா ஏற்றுக்கொண்டார்.