Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/இந்தியா/ ரயில் மோதி மகன் பலி பெற்றோர் தற்கொலை

 ரயில் மோதி மகன் பலி பெற்றோர் தற்கொலை

 ரயில் மோதி மகன் பலி பெற்றோர் தற்கொலை


ADDED : மார் 15, 2026 06:29 AM

Follow on Google

ADDED : மார் 15, 2026 06:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவனந்தபுரம்: கேரளாவில் மகன் ரயில் மோதி இறந்த மனவேதனையில் தாயும், தந்தையும் ஒரே நேரத்தில் தற்கொலை செய்து கொண்டனர்.

கேரள மாநிலம் காசர்கோடு அருகே பொயினாச்சி பகுதியைச் சேர்ந்தவர் வேணுகோபால் 54. மனைவி ஸ்மிதா 41. இவர்களது ஒரே மகன் சிவநந்தன் 19. கர்நாடக மாநிலம் மங்களூருவில் இன்ஜினியரிங் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த நிலையில் இவர் டிச., 21-ம் தேதி ரயில் மோதி இறந்தார்.

இதன் பின்னர் பெற்றோர் இருவரும் கடுமையான மன வேதனையில் இருந்தனர் .இதனால் உறவினர்கள் அவர்கள் வீட்டிலேயே வசித்து வந்தனர். நேற்று முன்தினம் வரை சுமிதாவின் தாயார் தங்கி இருந்தார். அவர் வீட்டுக்கு சென்று வருவதாக புறப்பட்டார்.

அடுத்த நாள் காலையில் அலைபேசியில் அழைத்த போது இருவரும் அழைப்பை எடுக்கவில்லை. இதை தொடர்ந்து உறவினர்கள் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வேணுகோபால், ஸ்மிதா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு கிடந்தனர்.

தங்கள் மகன் பிரிவை தாங்க முடியவில்லை. அவன் சென்ற இடத்திற்கே செல்வதாகவும், மகனை அடக்கம் செய்த இடத்தில் தங்களையும் அடக்கம் செய்ய வேண்டும் என்றும் கடிதம் எழுதி வைத்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap