Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/புது கணவன்களை கொல்லும் புது மனைவிகள் ; பீகாரில் மேலும் ஒரு திடுக்

புது கணவன்களை கொல்லும் புது மனைவிகள் ; பீகாரில் மேலும் ஒரு திடுக்

புது கணவன்களை கொல்லும் புது மனைவிகள் ; பீகாரில் மேலும் ஒரு திடுக்

புது கணவன்களை கொல்லும் புது மனைவிகள் ; பீகாரில் மேலும் ஒரு திடுக்

ADDED : ஜூலை 03, 2025 12:52 PM


Google News
Latest Tamil News
பாட்னா: சமீபத்தில் கணவன்மார்களை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்யும் சம்பவம் தொடர் கதையாகிறது . மத்திய பிரதேசம் இந்தூர் பகுதியை சேர்ந்த சோனம் ரகுன்ஷி என்ற பெண்மணி தனது தேனிலவில் கனவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் தற்போது பீகாரில் ஒரு கொலை சம்பவம் அரங்கேறி உள்ளது.

பீகாரின் அவுரங்காபாத் மாவட்டத்த்தை சேர்ந்தவர் குஞ்சா. குடும்ப ஒப்புதலுடன் கடந்த மே மாதம் பிரியான்ஷுவுடன் திருமணம் நடந்தது. திருமணமான 45 நாட்களுக்குப் பிறகு, புது மனைவி, தனது காதலன் (மாமா உறவுமுறையை சேர்ந்த உறவினர்) உடன் சேர்ந்து, தனது கணவரைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டினார்.

இதன்படி கடந்த ஜூன் 24ம் தேதி இரவு நபிநகர், லெம்போகாப் பகுதியின் அருகில் பிரியான்ஷு சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கை போலீசார் விசாரித்தனர். விசாரணையில் திடுக் தகவல் வெளியாகி உள்ளது.

தனது சொந்த மாமா ஜீவன் சிங்குடன் குஞ்சா தவறான நட்பில் நீண்ட நாள் பழகி உள்ளார். திருமணத்திற்குப் பிறகு, கணவர் பிரியான்ஷு அவர்களின் உறவுக்கு ஒரு தடையாக மாறினார். இதன் காரணமாக, குஞ்சாவும் ஜீவனும் சேர்ந்து கூலிப்படையை ஏவி கணவனை சுட்டு கொன்றனர். இந்த தகவலை மாவட்ட எஸ்.பி., அம்ப்ரிஷ் ராகுல் தெரிவித்தார்.

கொலை சதியில் தனது பங்கை குஞ்சா போலீசாரிடம் ஒப்புக்கொண்டார். குஞ்சாவும், ஜீவனும் தொடர்ந்து தொடர்பில் இருந்ததாகவும், ஜீவன் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுடன் பேசி கொலையைத் திட்டமிட்டதாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இறந்த பிரியான்ஷு மனைவி குஞ்சா சிங் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us