மைசூரு சாண்டல் துாதராக தமன்னா; அமைச்சர் விளக்கம்
மைசூரு சாண்டல் துாதராக தமன்னா; அமைச்சர் விளக்கம்
மைசூரு சாண்டல் துாதராக தமன்னா; அமைச்சர் விளக்கம்
ADDED : மே 24, 2025 02:09 AM

சதாசிவநகர் : பிரபல நடிகை தமன்னாவை, மைசூர் சாண்டல் சோப் நிறுவன துாதராக, கர்நாடக தொழில் மற்றும் வர்த்தக துறை நியமித்துள்ளது. இதற்காக அவருக்கு 6.20 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு கன்னட அமைப்புகள் உட்பட பலரும் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். 'கன்னட நடிகையரை நியமித்திருக்கலாம்' என, கருத்து தெரிவித்துள்ளனர்.
இதற்கு பதிலளிக்கும் வகையில், மாநில தொழில் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் அளித்த பேட்டி:
துாதர் பொறுப்புக்கு முதலில் நாங்கள் நடிகை ராஷ்மிகாவை தொடர்பு கொண்டு கேட்டோம். அவர் வேறொரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்ததால், தன்னால் முடியாது என, கூறினார்.
அதன்பின் நடிகை ஸ்ரீலீலாவை தொடர்பு கொண்டோம். அவரும் முடியாது என, கூறினார். கன்னட நடிகையர் முன் வராததால், கமிட்டியின் ஆலோசனைப்படி, நாங்கள் நடிகை தமன்னாவை தேர்வு செய்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.