Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ தெலுங்கானா சுரங்க விபத்து; இரண்டாவது உடல் மீட்பு

தெலுங்கானா சுரங்க விபத்து; இரண்டாவது உடல் மீட்பு

தெலுங்கானா சுரங்க விபத்து; இரண்டாவது உடல் மீட்பு

தெலுங்கானா சுரங்க விபத்து; இரண்டாவது உடல் மீட்பு

ADDED : மார் 26, 2025 01:08 AM


Google News
நாகர்கர்னுால் : தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னுால் மாவட்டத்தின் ஸ்ரீசைலம் அணை அருகே, 44 கி.மீ., நீளத்துக்கு சுரங்கம் அமைக்கப்படுகிறது.

பிப்., 22ல் திடீரென சுரங்கத்தின் மேற்பகுதியில் விரிசல் ஏற்பட்டதால், இரண்டு இன்ஜினியர்கள் உட்பட எட்டு பேர் உள்ளே சிக்கிக் கொண்டனர்.

தேசிய பேரிடர் மீட்புப் படை, ராணுவம், எலிவளை சுரங்க நிபுணர்கள் என, பல்வேறு தரப்பினரும் அடங்கிய குழுவினர், அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 30 அடி உயரம் கொண்ட சுரங்கத்தில் 25 அடி வரை சகதி நிரம்பிக் கிடக்கிறது.

கடந்த மார்ச் 9ல், டனல் போரிங் இயந்திரத்தின் ஆப்பரேட்டர் குர்பிரீத் சிங் என்பவரது உடல் மீட்கப்பட்டது.

இந்நிலையில், 30 நாட்களுக்குப் பின் நேற்று, மற்றொருவர் உடல் மீட்கப்பட்டுள்ளது. எனினும், இன்னும் ஆறு பேர் சுரங்கத்தில் சிக்கியுள்ளனர்.

அவர்களின் கதி என்னவானது என தெரியவில்லை. யாருடைய உடல் மீட்கப்பட்டது என்பது குறித்த தகவல் ெவளியாகவில்லை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us