செனாப் ரயில் பாலத்தின் அற்புதம்: 17 ஆண்டாக செதுக்கிய பேராசிரியை
செனாப் ரயில் பாலத்தின் அற்புதம்: 17 ஆண்டாக செதுக்கிய பேராசிரியை
செனாப் ரயில் பாலத்தின் அற்புதம்: 17 ஆண்டாக செதுக்கிய பேராசிரியை

புதுடில்லி: ஜம்மு - காஷ்மீரில், உலகின் மிக உயரமான, செனாப் ரயில் பாலம் திறக்கப்பட்டுள்ள நிலையில், அத்திட்டத்துக்காக, பேராசிரியை மாதவி லதா, 17 ஆண்டுகள் பணிபுரிந்த தகவல் தெரிய வந்துள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள கத்ராவில், செனாப் நதியின் ஆற்றுப்படுகையில் இருந்து, 1,178 அடி உயரத்துக்கு மேலே கட்டப்பட்ட ரயில் பாலத்தை பிரதமர் மோடி நேற்று முன்தினம் திறந்து வைத்தார்.
உலகின் மிக உயரமான இந்த பாலம், 1,486 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. உதம்பூர்- - ஸ்ரீநகர்- - பாரமுல்லா ரயில் இணைப்பின் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த பாலம் உள்ளது.
திட்ட வடிவமைப்பு
செனாப் ரயில் பாலத்தின் வெற்றிகரமான கட்டுமானத்திற்கு முக்கிய பங்காற்றியவர்களில் ஒருவர், பேராசிரியை மாதவி லதா.
பெங்களூரில் உள்ள, ஐ.ஐ.எஸ்சி., எனப்படும், இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தில் பேராசிரியையான இவர், செனாப் ரயில் பால திட்டத்தில், புவி தொழில்நுட்ப ஆலோசகராக, 17 ஆண்டுகள் பணிபுரிந்தார்.
பாலத்தின் ஒப்பந்ததாரரான, 'ஆப்கான்ஸ்' நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றிய அவர், நிலப்பரப்பால் ஏற்படும் தடைகளை மையமாகக் கொண்டு கட்டமைப்பின் திட்டமிடல், வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தில் ஈடுபட்டார்.
பாறைகளின் தன்மை
செனாப் ரயில் பாலத்தை கட்டுவதற்கு சவாலான நிலப்பரப்பு, வானிலை, தொலைதுார இருப்பிடம் ஆகியவை சவாலாக இருந்தன.
ஆனால், பேராசிரியை மாதவி லதா தலைமையிலான குழுவினர், அனைத்து தடைகளையும் கடக்க சிறந்த அணுகுமுறைகளை தயாராக வைத்திருந்தனர். அயராது உழைத்த இந்த குழுவினர், பாறைகளின் தன்மைகள், வழித்தடங்களை கண்டறிந்தனர்.