இந்திய தொழில் நுட்பத்தை உலக நாடுகள் பேசுகின்றன : பிரதமர்
இந்திய தொழில் நுட்பத்தை உலக நாடுகள் பேசுகின்றன : பிரதமர்
இந்திய தொழில் நுட்பத்தை உலக நாடுகள் பேசுகின்றன : பிரதமர்
UPDATED : ஜூலை 13, 2024 10:07 PM
ADDED : ஜூலை 13, 2024 07:42 PM

மும்பை: சமூகத்தை வடிவமைப்பதில் ஊடங்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி பேசினார்.
மும்பையில், இந்திய செய்திப்பத்திரிகைகள் சங்கத்தின் (ஐ.என்.எஸ்.,) புதிய கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசியதாவது:
ஊடகங்கள் நாட்டின் பிராண்டாக உள்ளது. சமூகத்தை வடிவமைப்பதில் ஊடகங்களில் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. ஜன்தன் வங்கி கணக்கு திட்டத்தை ஒரு இயக்கமாக கொண்டு சென்றுள்ளோம்.
இந்தியாவின் தொழில்நுட்பத்தை உலக நாடுகள் பேசுகின்றன. யு.பி.ஐ., தொழில்நுட்பத்தால் வாழும் முறை எளிமையாகியுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.