Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/சுவை மிகுந்த உணவு கிடைக்குமிடம்; உலகின் டாப் 100 பட்டியலில் 6 இந்திய நகரங்கள்!

சுவை மிகுந்த உணவு கிடைக்குமிடம்; உலகின் டாப் 100 பட்டியலில் 6 இந்திய நகரங்கள்!

சுவை மிகுந்த உணவு கிடைக்குமிடம்; உலகின் டாப் 100 பட்டியலில் 6 இந்திய நகரங்கள்!

சுவை மிகுந்த உணவு கிடைக்குமிடம்; உலகின் டாப் 100 பட்டியலில் 6 இந்திய நகரங்கள்!

ADDED : ஜூலை 03, 2025 01:58 PM


Google News
Latest Tamil News
புதுடில்லி: சுவை மிகுந்த உணவு கிடைக்கும் உலகின் டாப் 100 நகரங்களில், 6 இந்திய நகரங்கள் இடம் பிடித்துள்ளன.

டேஸ்ட் அட்லஸ் என்ற இணையதளம் உலகம் முழுவதும் உள்ள சிறந்த டிஷ் (உணவு வகைகள்), சிறந்த உணவு நகரங்கள், சிறந்த உணவு பொருட்கள், உணவுக்கு தேவையான சிறந்த பொருட்கள் போன்ற பல பிரிவுகளில் ஆய்வு செய்து பட்டியலை வெளியிட்டுள்ளது.

அந்த வகையில், இந்த இணையதளம் வெளியிட்டுள்ள சுவை மிகுந்த உணவு கிடைக்கும் இடங்களின் பட்டியல், இப்போது சமூக வலைதளத்தில் பேசுபொருளாகியுள்ளது. உலகின் முன்னணி நகரங்கள் இடம் பெற்றுள்ள இந்த பட்டியலில், 6 இந்திய நகரங்கள் இடம் பெற்றுள்ளன.

* 5வது இடம் பிடித்த மும்பை 4.81 மதிப்பீட்டை பெற்றுள்ளது. இங்கு வடை பாவ், பாவ் பாஜி மற்றும் பாம்பே பிரியாணி பிரபலம்.

* அமிர்தசரஸ் 4.49 மதிப்பீட்டை பெற்று 43வது இடத்தை பிடித்துள்ளது. இங்கு அமிர்தசரி குல்சா (Amritsari Kulcha) பிரபலம்.

* புதுடில்லி 4.48 மதிப்பீட்டை பெற்று, 45வது இடத்தை பிடித்துள்ளது. இங்கு சோலே பதுரே, நிஹாரி, பட்டர் சிக்கன் பிரபலம்.

* ஹைதராபாத் 4.47 மதிப்பீட்டை பெற்று, 50வது இடத்தை பிடித்துள்ளது. இங்கு பிரியாணி பிரபலம்.

* கோல்கட்டா 4.41 மதிப்பீட்டை பெற்று, 71வது இடத்தை பிடித்துள்ளது. இங்கு ரசகுல்லா மிகவும் பிரபலம்.

* சென்னை 4.40 மதிப்பீட்டை பெற்று, 75வது இடத்தை பிடித்துள்ளது. இங்கு தோசைகள் மற்றும் இட்லிகள் மிகவும் பிரபலம்.

உலகின் டாப் '100' சிறந்த உணவு நகரங்கள் பட்டியலில் இடம் பிடித்த 8 இந்திய நகரங்கள்:

* மும்பை- 5வது இடம்

* அமிர்தசரஸ்- 43வது இடம்

* புதுடில்லி- 45வது இடம்

* ஹைதராபாத்- 50வது இடம்

* கோல்கட்டா- 71வது இடம்

* சென்னை-75வது இடம்

உலகின் டாப் '100' சிறந்த உணவு நகரங்கள் முதல் 10 இடம் பிடித்த நகரங்கள்;

* நேபிள்ஸ் (இத்தாலி)

* மிலன் ( இத்தாலி)

* போலோக்னா (இத்தாலி)

* புளோரன்ஸ் (இத்தாலி)

* மும்பை (இந்தியா)

* ரோம் (இத்தாலி)

* பாரிஸ் (பிரான்ஸ்)

* வியன்னா (ஆஸ்திரியா)

* டுரின் (இத்தாலி)

* ஒசாகா (ஜப்பான்)





      Our Apps Available On




      Dinamalar

      Follow us